ஆடு மேய்க்க சென்ற சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முயன்ற தெருக்கூத்து கலைஞர்..!!
ஆடு மேய்க்க சென்ற சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முயன்ற தெருக்கூத்து கலைஞர்..!!
கைது செய்யப்பட்ட தெருக்கூத்து கலைஞர் விஜய்
Sexual harassment | தெருக்கூத்து கலைஞர் விஜய் என்பவர் சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தூக்கிச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக நபர் ஒருவர் வருவதைப் பார்த்த தெருக்கூத்து கலைஞர் அந்த சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
பண்ருட்டி அருகே சிறுமியை பாலியல் சீண்டல் செய்த தெருக்கூத்து கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழ்காங்கேயன் குப்பம் பகுதியில் தற்போது திருவிழாக்காலம் என்பதால் அதே பகுதியில் உள்ள அய்யனார் கோயிலுக்கு தெருக்கூத்து போடுவதற்காக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சில தெருக்கூத்து கலைஞர்கள் வந்துள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்கு உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் தனியாக அதே பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட தெருக்கூத்து கலைஞர் விஜய்
இந்த நிலையில் சிறுமி தனியாக இருந்ததை நோட்டமிட்டு அங்கு வந்த தெருக்கூத்து கலைஞர் விஜய் என்பவர் சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தூக்கிச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக நபர் ஒருவர் வருவதைப் பார்த்த தெருக்கூத்து கலைஞர் அந்த சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தெருக்கூத்து கலைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
செய்தியாளர் : பிரேம் ஆனந்த்.டி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.