Home /News /tamil-nadu /

Sexual harassment | தண்ணீர் கேட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் போக்சோவில் கைது

Sexual harassment | தண்ணீர் கேட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

Sexual harassment : தண்ணீர் கேட்ட சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடலூர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அதே கிராமத்தை ஒட்டிய பகுதியில்  ஆடு, மாடுகள் மேய்த்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது சிறுமிக்கு திடீரென தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள ஆக்கனூர் ஏரிக்கரை ஓரமாக உள்ள செல்வராசு (52) என்பவர் வீட்டிற்கு சென்று சிறுமி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

    அப்போது செல்வராசு தண்ணீர் தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்குள் அழைத்து அன்பாய் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் திடீரென அவர் வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கூச்சல் போடவே செல்வராசு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். சிறுமி தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதனையடுத்து  சிறுமியின் பெற்றோர் ராமநந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் பேரில் போலீசார் விசாரணை செய்தனர்.

    அப்போது சிறுமியை செல்வராசு பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செல்வராசுவை போலீசார் கைது செய்தனர்.

    ALSO READ | பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் 

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூரில் நேற்று காதலன் கண்முன்னே காதலியை  மூன்று நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் மறைவதற்குள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Sexual harassment

    அடுத்த செய்தி