Home /News /tamil-nadu /

போலி ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற மோசடி கும்பல் கைது

போலி ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற மோசடி கும்பல் கைது

மோசடி கும்பல்

மோசடி கும்பல்

கடலூர் மாவட்டம் வடலூர் கருங்குழி பகுதியில் புதன்கிழமை இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்படனர். இரவு நேரத்தில் சாலையில் செல்வோரிடம் மூன்று பேர் கொண்ட கும்பல் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லரை கேட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
கடலூர் மாவட்டத்தில் போலி ரூபாய் நோட்டுகளை மாற்றி நூதன முறையில் மோசடியில் ஈடுபட முயன்ற பலே மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் கருங்குழி பகுதியில் புதன்கிழமை இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்படனர். இரவு நேரத்தில் சாலையில் செல்வோரிடம் மூன்று பேர் கொண்ட கும்பல் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லரை கேட்டுள்ளது.

சந்தேகமடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களிடம் இருப்பது கள்ளரூபாய் நோட்டுகள் என்பதை உறுதிபடுத்தியனர். மூவரையும் பிடித்த வடலூர் போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கினர்.

பிடிபட்டவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 53 வயதான ராமசாமி ,விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 52 வயதான சுப்புராஜ் மற்றும் சாத்தூரை சேர்ந்த 52 வயதான பார்வதி என்று தெரியவந்தது.

ராமசாமி தனது நண்பரான தமிழ் என்பவரிடம் ரசாயனம் தடவிய கருப்பு ரூபாய் தாள்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவற்றை மாற்றிக்கொடுத்தால் கூடுதல் தொகை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

Also read... தூக்க கலக்கத்தில் 2-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த வடமாநில இளைஞர் - போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

இதையடுத்து தமிழ் தனக்கு தெரிந்த நண்பர்களான கணேசன், பார்வதி, சுப்புராஜ் மற்றும் ஓட்டுநர் சரவணன் ஆகியோரிடம் கூறி வடலூர் வள்ளலார் சபைக்கு சொந்தமான மேட்டுக்குப்பம் தீஞ்சுவை நீரோடை அருகே வரவழைத்துள்ளார்.

அவர்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் மீது கருப்பு மை அயோடின் சிங்கர் மற்றும் சோடா உப்பு கலவை தடவப்பட்டு இருந்ததை அவர்களிடம் தண்ணீரில் கழுவி நல்ல ரூபாய் நோட்டுகளாக மாற்றிகாட்டியுள்ளார் ராமசாமி.

இதேபோல் பல கருப்பு தாள்கள் தன்னிடம் உள்ளதாகவும் இதனை கழுவினால் ஒரிஜினல் நோட்டாக மாறும் என மற்றவர்களிடம் கூறி மோசடி செய்ய முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்களிடமிருந்து 112 கருப்பு நிற ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய போலீசார் இது போன்று கருப்பு ரூபாய் மோசடி கும்பல்களை நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி