திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தியதுடன், ஆற்றின் ஓரம் மொட்டை அடித்து கொண்டிருந்தவர்களையும் போலீசார் விரட்டி அடித்தனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பலர் மொட்டையடித்து நேர்த்திக்கடனும் செலுத்துவார்கள். தற்போது பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நடைபெறுவதால், கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
ஆண்டுதோறும் புரட்டாசி 3-வது சனிக்கிழமை அன்று கோவிலில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாட்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனால் புரட்டாசி 3-வது சனிக்கிழமையான இன்று கோவிலில் பெருமாளை தரிசிக்க முடியாது என்று எண்ணிய பக்தர்கள் கோவில் கோபுர தரிசனம் செய்ய அதிகாலையிலேயே ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். இவர்கள் போலீசார் நுழைவு வாயிலிலே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
Also Read:
தீபாவளி கழித்து பள்ளிகள் திறக்க அரசு பரிசீலிக்குமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
மேலும் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்த அருகாமையில் உள்ள கெடிலம் ஆற்றின் ஓரமாக நேர்ததிக்கடன் செலுதியவர்களையும் போலீசார் விரட்டினர். இதனால் தரிசனம் வழிபட வந்த பக்தர்கள் நுழைவு வாயிலில் இருந்த கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். அங்கும் மக்கள் கூட்டம் அதிகளவு கூடியதால் போலீசார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, வார இறுதி நாட்களில் கோவில்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அதற்கு மாற்றாக கடந்த புதன் கிழமையன்று முடி காணிக்கை செலுத்த பக்தர்கள் முடிவு செய்திருந்தனர். அன்றைய தினம் மட்டும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.