• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாமக நிர்வாகி அடித்துக் கொலை: திமுக எம்.பி. மீது வழக்கு.. கடலூரில் பரபரப்பு..

பாமக நிர்வாகி அடித்துக் கொலை: திமுக எம்.பி. மீது வழக்கு.. கடலூரில் பரபரப்பு..

பாமக நிர்வாகி அடித்துக் கொலை: திமுக எம்.பி. மீது வழக்கு.. கடலூரில் பரபரப்பு..

பாமக நிர்வாகி அடித்துக் கொலை: திமுக எம்.பி. மீது வழக்கு.. கடலூரில் பரபரப்பு..

கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த பாமக நிர்வாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாமக நிர்வாகியான கோவிந்தராஜ். இவர் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்ற கோவிந்தராஜ் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனிடையே, கோவிந்தராஜன் மகனுக்கு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷின் தொலைபேசியில் இருந்து உங்கள் தகப்பனார் இறந்து விட்டார் என்று தகவல் கூறியுள்ளனர்.

    அதன்பேரில், கோவிந்தராஜன் மகன் சென்னையில் இருந்து ஊருக்கு விரைந்து வந்துள்ளார். தொடர்ந்து, இறந்த கோவிந்தராஜின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு கோவிந்தராஜின் உடலை சென்று பார்த்தபோது, அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது. மேலும், கண்ணம், காது போன்ற பல இடங்களில் காயம் இருந்துள்ளது.

    இதையடுத்து, கோவிந்தராஜன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், கொலைக்கு காரணமான கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி ரமேஷ் உள்பட முக்கிய குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது புகார் கொடுக்கப்பட்டவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளதாகவும், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    Also read: ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்: நிலைமை மாறியதால் நிலைப்பாடு மாறியது; கொள்கை மாறவில்லை.. பிடிஆர் விளக்கம்

    எனினும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து மேலும் பிரேத பரிசோதனைக்கு குழுவாக டாக்டர்களை அமைத்து அதுவும் வெளிமாவட்ட மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனையின் போது உறவினர்கள் மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

    பண்ருட்டி அருகே பாமக பிரமுகர் முந்திரி தொழிற்சாலையில் மர்ம முறையில் இறந்திருப்பதோடு, திமுகவின் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: