Petrol Diesel Price | கடலூர் மாவட்டத்தில் 100ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

மாதிரி படம்

கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.1 காசுகளாகவும், டீசல் 94ரூபாய் 07காசுகளாகவும் விற்பனை செய்யபடுகிறது. 

  • Share this:
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை தினசரி விலை நிர்ணயம் என்ற அடிப்படையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வந்தது. அதன்பிறகு 3 எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையை விட கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு உள்ளது என்றே கூறலாம்.  இன்று  பெட்ரோல் விலை 27 காசுகள் டீசல் விலை 28 காசுகள் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் 97.69 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க... Petrol Diesel Price | "பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை": மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

ஆனால் இன்று கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 64 காசாகவும், டீசல் 93 ரூபாய் 79 காசாகவும் உயர்நதுள்ளது.
அதைவேளை கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.1 காசுகளாகவும், டீசல் 94ரூபாய் 07காசுகளாகவும் விற்பனை செய்யபடுகிறது.

மேலும் படிக்க... Tasmac | சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

கடந்த மே மாதம் முதல் தற்போது வரை 22 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதன்படி கடலூர் மாவட்டத்துக்கு சென்னை மண்டலத்தில் இருந்து பெட்ரோல், டீசல் வருகிறது. இதில் கடைசி பகுதியாக இருப்பது  காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகும்.
இதில் லாரிகளில் எடுத்துவரப்படுவதற்கான வாடகையை நிர்ணயம் செய்வதன் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே ஆன்லைன் மூலமாக விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.  அதன்படியே குமராட்சி பகுதியில் இந்த விலையில் விற்பனை நடைபெறுகிறது.

இந்தக் கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் மக்கள் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளத. இந்த பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் மீதான விலை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க... Black fungus | கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் விவசாயி... சிகிச்சை அளிக்க மருந்து இல்லை என புகார்...

மேலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியாது என பெட்ரோலியத்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகள் பெட்ரோல் டீசல் விலை ஐந்து ரூபாய் முதல் நான்கு ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள நிலையில் தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Published by:Vaijayanthi S
First published: