தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாமல் இருந்தது. முதல் அலையின் தாக்கம் குறைந்தபோது ஒரு சில நாட்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
ஆங்காங்கே தொற்று பரவல் அபாயத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டும் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இல்லாத நிலை இருந்தது. இதனால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடந்து வந்தது.
இதனிடையே, தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததால், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. தொடர்ந்து, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்தது.
Also read: பள்ளி மாணவியை தொடர்ந்து அரசுக் கல்லூரி மாணவிக்கும் கொரோனா உறுதி!
இதைத்தொடர்து, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்புகளுக்கு சுழற்சிமுறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளி திறந்து 3 நாட்களில் 4 ஆசிரியைகள் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியை ஒன்று மற்றும் இரண்டாம் தேதி வகுப்புகள் எடுத்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது.
இதையடுத்து, அந்த பள்ளியின் சக ஆசிரியர்கள் மற்றும் பாடம் எடுத்த மாணவ - மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய பள்ளி முடிவெடுத்துள்ளது, பள்ளியை தூய்மை செய்யும் பணியில் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் கடலூர் பெண்கள் அரசு பள்ளி ஆசிரியருக்கு தொற்று உறுதியான நிலையில், நேற்று நெய்வேலி அருகே தனியார் பள்ளியை சேர்நத 2 ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4 ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.