அசானி புயல் காரணமாக 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
அசானி புயல் காரணமாக 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Cyclone Asani | அசானி புயல் காரணமாக தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் சுற்றுப்புறங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Depression) புயலாக மாறிள்ளது. இப்புயலுக்கு ASANI என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வட மேற்கு திசையில் நகர்ந்து தீவிரபுயலாக மாறியுள்ளது.
அசானி புயல் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று( மே10) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூரில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும் புயல் காரணமாக கடலூரில் கடல் சீற்றம் என்பது அதிகரித்து காணப்படுகிறது கடலின் சீற்றம் வழக்கத்தைவிட 4 அடி உயரத்திற்கு அலை சீற்றத்துடன் காணப்படுவதால் கடலூர் வெள்ளி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக கடலூர் உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களில் 2 எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.