• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கனமழையால் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

கனமழையால் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

வெள்ளத்தில் மூழ்கிய பயிர்

வெள்ளத்தில் மூழ்கிய பயிர்

அதிகாரிகள் தண்ணீரை வடிய வைப்பதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் தொடரும் கனமழையால் 20ஆயிரம் ஏக்கர் நில பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. வயல்களில் தேங்கியுள்ள  தண்ணீரை விரைவில் வடிய வைக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலேயே திருப்பூண்டியில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக நேற்று மாலை முதல் இன்று காலை வரை நாகப்பட்டினம், மயிலாடுதுறை,கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக நாகப்பட்டினம்  மாவட்டத்தில் நாகப்பட்டினம் (29.1செ.மீ) வேதாரணியம் (25.2 செ.மீ)  திருப்பூண்டி (31 செ.மீ) உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. அதே போல்  மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், கில்லை, தைக்கால் பொன்னத்திட்டு, சி மானம்பாடி பகுதியிலும் கனமழை பதிவாகியுள்ளது.

இதனால் இந்தப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. இந்த நெற்பயிர்கள் சூழ்ந்துள்ள தண்ணீர் ஒன்று. இரண்டு நாட்களுக்குள் வடியவில்லை என்றால் பயிர் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக பயிரிடப்பட்ட ஒரு சில பகுதிகளில் நெற்பயிர்கள் முற்றிலும் அழுக தொடங்கியுள்ளது.

இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வரும் சூழ்நிலையில் கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டு கணக்கீடு செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாத சூழ்நிலையும் இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

Must Read : சென்னையில் கொட்டும் கனமழை : தாழ்வான பகுதிகளில் வடியாத வெள்ளம்

எனவே, உடனடியாக அதிகாரிகள் தண்ணீரை வடிய வைப்பதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: