தமிழகத்தில் இன்று 3 வது வார முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் கடலூர் திருவந்திபுரம் கோவில் சாலையில் 100க்கு மேற்பபட்ட ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கக் கூடாது மேலும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் திருமணம் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முகூர்த்தநாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு திருமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் திரண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் மலைமீது உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு உள்ள சாலையில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் திருவந்திபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களிலும் 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த பகுதியில் இன்று ஒரே நாளில் 150 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Also read... ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்போம் - கர்நாடக முதல்வர்!
இன்று காலை நடைபெற்ற பெரும்பாலான திருமணத்துக்கு வந்திருந்த பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் திருமணத்தை நடத்தி வைப்பவர்களும் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் திரண்டு இருந்ததால் தொற்று நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் நிலவியது.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய விழா நாட்களில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்கள் கூட்டம் சேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lockdown