Home /News /tamil-nadu /

நெய்வேலி என்எல்சி சுரங்க நீரை குடிநீராக மாற்ற திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு

நெய்வேலி என்எல்சி சுரங்க நீரை குடிநீராக மாற்ற திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு

Cuddalore : NLC சுரங்க உபரிநீர் 479 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 740 குடியிருப்புகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீராக அனுப்பப்படும்.

Cuddalore : NLC சுரங்க உபரிநீர் 479 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 740 குடியிருப்புகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீராக அனுப்பப்படும்.

Cuddalore : NLC சுரங்க உபரிநீர் 479 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 740 குடியிருப்புகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீராக அனுப்பப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்க உபரி நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.

கடலூர் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நேரு கூறுகையில் நெய்வேலி என்எல்சி சுரங்க நீரை குடிநீராக மாற்றும் பணி துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த சுரங்க உபரிநீர் 479 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 740 குடியிருப்புகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீராக அனுப்பப்படும் என தெரிவித்த அவர், தினமும் 31 எம் எல் டி தண்ணீர் 769 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் வழங்கப்படும் என்றார்.

இதற்காக 179 சம்புகள் அமைக்கப்பட்டு 5 லட்சத்து 45 ஆயிரம் பேர் வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதுமே அனைத்து பெருநகரங்களிலும் குப்பை கொட்டுவது பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் ‘பையோ மைனிங்’ முறைப்படி குப்பையை தரம் பிரித்து மக்கும் குப்பையை உரமாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Read More : விமான நிலையத்தில் கள்ள துப்பாக்கியுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது

இந்த கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Must Read : ஜல்லிக்கட்டு போட்டியை எப்படி நடத்துவது? அமைச்சர் ஆலோசனை

மேலும், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Drinking water, KN Nerhu, NLC

அடுத்த செய்தி