முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடலூரில் பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை - போக்சோ சட்டத்தில் கைது

கடலூரில் பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை - போக்சோ சட்டத்தில் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உன்ளது .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கடலூரில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, மகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது பாரூக் (42). இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். இவருக்கு 15 வயதில் ஒருமகளும், 18 வயதில் ஒரு மகளும் என இரு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் முகமது பாரூக்  மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

எனவே, அவரது மகள்கள் இருவரையும் தனது அரவணைப்பில் தந்தையான முகமது பாரூக் வளர்த்து வந்தார். மேலும், பாரூக் மீண்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பாரூக்கின் 15 வயது மகள் கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். சிறுமியின் புகாரை கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதில், கடந்த ஒரு வருடமாக எனது தந்தை தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல்  ஆய்வாளர் மகேஷ்வரி வழக்குப் பதிவு செய்து முகமது பாருக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உன்ளது .

First published:

Tags: Arrest, Crime News, Cuddalore, Police complaint, Sexual harassment