மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள்தண்டனை - சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு
மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள்தண்டனை - சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு
சிதம்பரம் கோர்ட் தீர்ப்பு
Cuddalore District : இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பு அளித்தார்.அதில் சுந்தரபாண்டியனை கொலை செய்த கோசிமின் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
சிதம்பரம் அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை வெட்டிக் கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோயிலை அடுத்த ராஜசூடாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கோசிமின்(36). இவரும் சிதம்பரம் எம்.கே. தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் (36) என்பவரும் நண்பர்கள். சுந்தரபாண்டியன் கோசிமின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்.
அப்போது கோசிமினின் மனைவி தெய்வலட்சுமிக்கும், சுந்தரபாண்டியனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இவர்களின் கள்ளத்தொடர்பு கோசிமினுக்கு தெரிய வந்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் பழக்கத்தை கைவிடவில்லை. இதனால் கோசிமின் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி கோசிமின் வீட்டிற்கு சுந்தரபாண்டியன் சென்றுள்ளார். அப்போது கோசிமின் தனது வீட்டிற்கு வந்த சுந்தரபாண்டியனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து காட்டுமன்னார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோசிமினை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை சிதம்பரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பு அளித்தார்.அதில் சுந்தரபாண்டியனை கொலை செய்த கோசிமின் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் மனோகரன் ஆஜராகி வாதாடினார்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.