Home /News /tamil-nadu /

முழு ஊரடங்கு: கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்... போலீசார் திணறல்

முழு ஊரடங்கு: கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்... போலீசார் திணறல்

புதுவைக்கு மதுபிரியர்கள் படையெடுப்பு

புதுவைக்கு மதுபிரியர்கள் படையெடுப்பு

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பல கரையோரப்பகுதிகளில் வழியாக மதுபிரியர்கள் போலீசாரை திசை திருப்பி புதுச்சேரிக்கு மதுகுடிக்க செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் முழு ஊரடங்கு  காரணமாக கடலூரில் இருந்து புதுவை பகுதிக்கு மதுபிரியர்கள் படையெடுத்து வருகின்றனர்.  போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டாலும் மதுபிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாடுகள் ஜனவரி31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,வார நாட்களில் இரவு ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்துள்ளது.  இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையாக இன்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

    கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா  போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை எல்லைகளில் போலீசார் தீவிரமாக சோதித்து வருகின்றனர். அத்தியாவசிய காரணங்களுக்காக வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.  தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுகடைகளும் மூடப்பட்டுள்ளன.

    அதேவேளையில், புதுச்சேரியில் முழு ஊரடங்கு இல்லை என்பதால், புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளை சேர்ந்த மதுபிரியர்கள் போலீசார் சோதனைகளை தாண்டி மது குடிக்க அங்கு சென்று வருகின்றனர். கடலூர் சாவடி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கடந்து புதுவை பகுதிக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் நடைபயணமாக படையெடுக்க தொடங்கினர்.



    இதனை அறிந்த போலீசார் சாவடி அருகே உள்ள சோதனைச் சாவடிகள் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பல கரையோரப்பகுதிகளில் வழியாக மதுபிரியர்கள்  போலீசாரை திசை திருப்பி மதுகுடிக்க செல்கின்றனர். இவர்களை தடுக்க முடியாமல் கடலூர் போலீசார் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

    செய்தியாளர்:  பிரேம்- கடலூர்

    இதையும் படிங்க: புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை நிறுத்தம்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Cuddalore, Puducherry, Tasmac

    அடுத்த செய்தி