Home /News /tamil-nadu /

வாக்குப்பதிவு இயந்திரம் அறையின் சாவியை மறந்து விட்டதால் பூட்டினை உடைத்த அதிகாரிகள்... கடலூரில் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரம் அறையின் சாவியை மறந்து விட்டதால் பூட்டினை உடைத்த அதிகாரிகள்... கடலூரில் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரம் அறையின் சாவியை மறந்து விட்டதால் பூட்டினை உடைத்த அதிகாரிகள்

வாக்குப்பதிவு இயந்திரம் அறையின் சாவியை மறந்து விட்டதால் பூட்டினை உடைத்த அதிகாரிகள்

கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் சாவியை மறந்து விட்டதால் பூட்டினை அதிகாரிகள் உடைத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் சாவியை மறந்து விட்டதால் பூட்டினை அதிகாரிகள் உடைத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் 5 நகராட்சி மற்றும் 16 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் அந்தந்த மாவட்டங்களில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமான தனியார் பள்ளிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பூட்டி வைக்கப்பட்ட அறையின் சாவி எடுத்து வராததால் திறக்கப்படாமல் காத்திருந்தனர். நீண்ட நேரம் சாவியை தேடிய பின், அறையின் பூட்டை உடைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Cuddalore, Local Body Election 2022

    அடுத்த செய்தி