கடலூர் அடுத்த கோண்டூர் பெண்ணை நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். 21 வயதான இவர் எம்.டெக் படித்து வருகிறார்.கடலூர் வெளிச்செம்மண்டலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கராத்தே பள்ளியில் கராத்தே பயின்று வருகிறார்.மாணவர் கார்த்திக் குத்துச்சண்டை,கராத்தே போட்டிகள் என பல்வேறு சாதனை படைத்துள்ளார்.
இந்தநிலையில் இன்று மேலும் ஒரு சாதனை படைக்கும் விதமாக 108 ஓடுகளை தனது கட்டை விரலால் 39 நொடியில் உடைத்து சாதனை செய்தார். இதனை அடுத்து சாதனை புரிந்த மாணவருக்கு கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Also Read : பால் குடத்துடன் சென்ற இந்துக்கள்.. போராட்டத்தை நிறுத்தி வழிவிட்ட இஸ்லாமியர்கள்
இவரின் இந்த சாதனையை பாராட்டி நோபல் புக் ஆப் ரெக்கார்ட் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினர். இந்த சாதனை நிகழ்த்திய போது மாணவர் கார்த்திக் கட்டைவிரல் சேதமடைந்து ரத்தம் வெளியேறிய போதும் இந்த சாதனையை அவர் செய்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
செய்தியாளர் : பிரேம் ஆனந்த், கடலூர் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.