11 ஆண்டுகளாக அடைப்பட்டு கிடக்கும் ’கலைஞர்’ இலவச டிவிக்கள்: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வண்ண தொலைக்காட்சிகள்

2011 ம் ஆண்டு  தேர்தலில் திமுக தோற்று ஆட்சி மாற்றத்திற்கு பின் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தை ரத்து செய்தார். இதனால், 1000த்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சிகள் சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டன.

  • Share this:
கடலூர் அருகே சமுதாய நலகூடத்தில் 11 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் பூட்டி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செம்மண்டலம் குண்டு சாலையில் அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் மற்றும் செம்மண்டலம் பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன்பாட்டிற்காக, திமுக ஆட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய நலக்கூடத்தில், இலவசமாக பிறந்த நாள் விழா, காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, வளையணி விழா திருமணங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையும் படிங்க: தேர்தலுக்கு முன் அவசர அவசரமாக போடப்பட்ட 660 ஒப்பந்தங்கள் அதிரடி ரத்து!


2006 ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கபடும் என கலைஞர் அறிவித்தார். பின்னர் திமுக வெற்றி பெற்று ஆட்சியின்போது பொதுமக்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. குண்டு சாலை பகுதி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சுமார் 1,000 வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் அந்த சமுதாய நலக்கூடத்தில் வைத்து பூட்டப்பட்டு இருந்தன.பின்னர் 2011 ம் ஆண்டு  தேர்தலில் திமுக தோற்று ஆட்சி மாற்றத்திற்கு பின் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தை ரத்து செய்தார்.

மேலும் படிக்க: சார்பட்டா சொல்லும் அரசியல் என்ன? திமுக, அதிமுக வாதம்!


இந்நிலையில், குண்டு சாலை சமுதாய நலக்கூடத்தில் கலைஞர் வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளை என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த 11 வருடங்களாக கூடத்தை பூட்டியே வைத்துள்ளனர். இதனால் வண்ண தொலைகாட்சிகள் அப்படியே வீணாகும் நிலையில் உள்ளது.மேலும் , அந்த பகுதி மக்களின் நலனுக்காக பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அந்த சமுதாய நலக்கூடம் 11 ஆண்டு காலமாக மக்களுக்கும் பயன்படாமல் பாழடைந்து சீரழிந்து வருகிறது. பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: சார்பட்டா திமுகவின் பிரச்சாரப் படம்: ஜெயக்குமார்!


தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில்,  இப்போதாவது கலைஞர் வண்ணத் தொலைக் காட்சிகளை சமுதாய கூடத்தில் இருந்து வெளியே எடுத்து ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும்  சமுதாய நல கூடத்தை  புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்றும்  கோரிக்கை எழுந்துள்ளது.
Published by:Murugesh M
First published: