தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த வெயிலை சமாளிக்க மண்பானை குடிநீர் , தர்பூசணி உணவு , பழங்கள் ஜூஸ் , மோர்பந்தல் , வெள்ளரிக் காய் என பலரும் வெயிலுக்கேற்ற உணவு வகைகளை தேடி தேடி உண்கின்றனர்.
மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் விலங்குகளுக்கு சொல்லவா வேண்டும். குரங்கு ஒன்று தண்ணீர் தேடி அலைந்து இறுதியில் வாட்டர் பாட்டிலில் கிடைத்த 1 லிட்டர் தண்ணியை தாகம் தீரும் வரை குடித்து முடித்த செயல் இணையத்தில் பலரின் கவனம் பெற்று வருகின்றது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. கடந்த சில தினங்களாக 98 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கின்றன. நீர்நிலைகள் ஏரி குளம் கால்வாய் போன்றவற்றில் தண்ணீர் குறைந்தும் , குளங்கள் வற்றிய நிலையில் காணப்படுவதாலும் குளத்தில் வாழ்ந்து வந்த மீன்கள் இறந்து போன நிலையிலும் பறவைகள் நீரை தேடி அலைந்த நிலையும் உள்ளது. இதுபோன்று தெருக்களில் சுற்றித் திரியும் நாய், பூனை, குரங்குகள், போன்ற விலங்குகளும் தண்ணீர் இன்றி சுற்றித் திரிகிறது.
இந்த நிலையில் கடலூர் அருகே குரங்கு ஒன்று தண்ணீர் தேடி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் தாகத்தால் தவித்த குரங்கிற்கு ஒருவர், வாட்டர் பாட்டலில் தண்ணீர் கொடுக்கின்றார். பின்னர் அந்த பாட்டலில் உள்ள நீரை முழுமையாக குடித்து முடித்த குரங்கு தாகத்தை தீர்த்துக்கொள்கின்றது.
அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் ஆங்காங்கே தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளை பாதுகாக்க வீடுகளில் சிறு சிறு பாத்திரங்களில் தண்ணீர் வைத்தால் தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள் கோடை வெப்பத்தை தணிக்க உதவும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
செய்தியாளர் : பிரேம் ஆனந்த்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.