Home /News /tamil-nadu /

கள்ளக்காதலிக்காக நண்பனை குத்திக்கொலை செய்த இளைஞன்.. விபத்து போல் சித்தரிக்க முயற்சி - காட்டிக்கொடுத்த போன்கால்

கள்ளக்காதலிக்காக நண்பனை குத்திக்கொலை செய்த இளைஞன்.. விபத்து போல் சித்தரிக்க முயற்சி - காட்டிக்கொடுத்த போன்கால்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெண்ணுடன் பழகுவதில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்காதலியுடன் பழகுவதில் ஏற்பட்ட போட்டியால் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் நபீஸ். நேற்று முன்தினம் இரவு நபிஸ் தனது வீட்டில் அவரது நண்பர்களான மனோஜ் , பிரேம்குமார், கலைச்செல்வன் உள்ளிட்டோருடன் மது அருந்தியுள்ளார். அவர்களின் மற்றொரு நண்பனான அருண் என்பவரை மது அருந்த அழைத்துள்ளனர். மதுபோதையில் அருண், பிரேம் குமார் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம் குமார் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு அருணின் வயிற்றுப்பகுதியில்  குத்தியுள்ளார். அருணின் உடலில் இருந்து ரத்தம் வெளியேறத் தொடங்கியது. வீட்டில் இருந்த அருணை சாலையில் கொண்டு வந்து போட்டு விபத்து போல் சித்தரித்துள்ளனர்.

அருணின் நண்பரான மனோஜ்  108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.  இதனையடுத்து விருத்தாசலம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அருணை ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருணின் கைப்பேசியை கைப்பற்றிய போலீசார் அதனை வைத்து விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து அருணின் நண்பர்களை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

Also Read: காதல் மனைவியை கொன்றுவிட்டு கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்த நபர் – திருப்பத்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், “ உயிரிழந்த அருண் ஆண்டிமடம்  அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த ஏசுராஜ் என்பவரின் மகன் என்பது தெரியவந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது பெற்றோர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். விருத்தாசலத்தில் உள்ள தன் தாயை சந்திக்க வரும்போது  தன் நண்பர்களை சந்தித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பிரேம்குமார், மனோஜ், கலைச்செல்வன், மற்றும் அருண் இடையே சிறுவயது முதலே பழக்கம் இருந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒன்றாக படித்தவர்கள். அருண், பிரேம் குமார் இருவரும் சென்னை மெரினா கடற்கரையில் சாவி கொத்தில் பெயர் அச்சிடும் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது அங்கு மீன் விற்கும் ஒரு பெண்ணுடன் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. நண்பர்கள் இருவரும்   அடிக்கடி தனித்தனியாக அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும் அந்த பெண்ணுடன் பழகுவது தொடர்பாக அருண்ராஜ் மற்றும் பிரேம்குமாருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மனோஜ் பிறந்தநாளுக்காக நண்பர்கள் விருத்தாசலம் வந்துள்ளார். முகமது நபீஸ் வீட்டில் வைத்து மதுவிருந்து நடந்துள்ளது. போதை தலைக்கு ஏறியதும் பெண்ணுடன் யார் தொடர்பு வைத்துக் கொள்வது என்ற விவகாரம் மீண்டும் வெடித்தது. அப்போது பிரேம்குமார், அருணிடம் இளம்பெண்ணிடம் உள்ள தொடர்பை கைவிடுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Also Read:  இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தகாத உறவு காரணமா? - விசாரிக்கும் போலீஸ்

இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கத்தியால் அருண்ராஜின் வயிறு மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அருண்ராஜ், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், விபத்து நிகழ்ந்ததுபோல் சித்தரிக்க திட்டமிட்டனர். அதன்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருண்ராஜை அதிகாலை 2.30 மணி அளவில் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தூக்கி கொண்டு வந்து  வீட்டின் எதிரே உள்ள சாலையின் நடுவில் போட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்-க்கு மனோஜ் போன் செய்து விபத்து நடந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அங்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது. இதை பார்த்ததும் நண்பர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

ஆம்புலன்சில் வந்த ஊழியர், அருண்ராஜை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகி்ச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளம்பெண்ணுடன் பழகுவதில் ஏற்பட்ட போட்டியால் நண்பர் பிரேம்குமார் என்பவர் அருண்ராஜை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கொலை நடந்த முகமது நபிசி்ன் வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.  இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமார்,  மனோஜ், கலைச்செல்வன், முகமது நபிஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மது விருந்துக்காக அழைத்து வாலிபரை நண்பர்களே கொலை செய்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாலிபர் கொலை நடந்த 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டினார்.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Friends, Illegal affair, Illegal relationship, Man killed, Murder

அடுத்த செய்தி