• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாமியாருடன் முறையற்ற உறவு.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை - கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மாமியாருடன் முறையற்ற உறவு.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை - கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கடலூர் கொலை

கடலூர் கொலை

மனைவி பவித்ராவிடம் நடத்திய விசாரணையில் இவர்களது முறையற்ற உறவு தனக்கு தெரியாது எனவும் இருவரும் அக்கா தம்பி என்பதால் ஒரே அறையில் படுத்து உறங்குவார்கள் எனவும் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

  • Share this:
    கடலூரில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அவரது அக்கா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமியின் மகன் வேல்முருகன் (வயது 27). பெரியசாமிக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவிக்கு குமுதா என்ற பெண் உள்ளார். குமுதாவின் மகள் பவித்ராவை வேல்முருகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். 9 மாத கர்ப்பிணியான பவித்ரா வேப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி இரவு தனது மனைவியை பார்த்துவிட்டு வருவதாக கூறி வேல்முருகன் வேப்பூர் சென்றுள்ளார். மனைவி வீட்டிலே இரவு வேல்முருகன் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் இரவு 11.30 மணிக்கு குமுதா வேல்முருகனின் தாயை தொடர்புகொண்டு அவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளார். வேல்முருகனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது தாய் மலர்கொடி மற்றும் ஆகியோர் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். வேல்முருகன் இறந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். வேல்முருகனின் தாய் மலர்க்கொடி தனது மகன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இதனையடுத்து வேல்முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் வேல்முருகனின் கழுத்து நெறிக்கப்பட்டது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் குமுதாவிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் போலீஸாரின் விசாரணையில் குமுதா அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். குமுதாவுக்கும் வேல்முருகனுக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அக்கா – தம்பி என்பதால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இந்நிலையில் தனது மகளையும் தம்பி வேல்முருகனுக்கு கட்டிவைத்துள்ளார் குமுதா. திருமணத்துக்கு பின்பும் இந்த உறவை இருவரும் தொடர்ந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அக்டோபர் 28-ம் தேதி மதுபோதையில் மனைவி பவித்ராவை பார்க்க வேல்முருகன் சென்றுள்ளார். கணவன் – மனைவி இருவரும் ஒரு அறையில் படுத்து உறங்கியுள்ளனர். பக்கத்து அறையில் குமுதா தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். நள்ளிரவில் குமுதாவின் அறைக்கு சென்ற வேல்முருகன் உல்லாசம் அனுபவிக்க அழைத்துள்ளார். பக்கத்து அறையில் மகள் படுத்து உறங்குவதால் வேண்டாம் என மறுத்துள்ளார்.

    மதுபோதையில் இருந்த வேல்முருகன் குமுதாவை வற்புறுத்தியுள்ளார். அப்போது குமுதா வேல்முருகனின் கழுத்தில் கை வைத்து தள்ளிவிட்டுள்ளார். இதில் நிலைக்குலைந்த வேல்முருகன் கீழே விழுந்துள்ளார். அதன்பின் பேச்சு மூச்சு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குமுதா வேல்முருகன் உடலை தூக்கில் கட்டி தொங்கவிட்டு தற்கொலை நாடகம் நடத்தியது விசாரணையில் அம்பலமானது. பவித்ராவிடம் நடத்திய விசாரணையில் இவர்களது முறையற்ற உறவு தனக்கு தெரியாது எனவும் இருவரும் அக்கா தம்பி என்பதால் ஒரே அறையில் படுத்து உறங்குவார்கள் எனவும் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: