• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிதம்பரத்தில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

சிதம்பரத்தில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

மழை

மழை

சிதம்பரத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழையுடன் இடி மின்னல் காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

  • Share this:
சிதம்பரம், சீர்காழி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது.

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெருங்காலூர், பரிவிளாகம், வடம்பூர்,துணிசிரமேடு,கொடியாளம், புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை,கிள்ளை, சாமியார்பேட்டை, கரிக்குப்பம், முழுகுதுறைகு, எம்ஜிஆர் திட்டு, பிச்சாவரம்,  கோவிலம்பூண்டி,மண்டபம்,சிருகாலூர், பண்ணப்பட்டு, அய்யனூர், அக்கராமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

சிதம்பரம் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால்  பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன்காரணமாக  பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தற்போது பெய்து வரும் மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: