Home /News /tamil-nadu /

'குடிநீர், கழிவறை, வகுப்பறை வசதி வேண்டும்' - தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

'குடிநீர், கழிவறை, வகுப்பறை வசதி வேண்டும்' - தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

சேதமடைந்துள்ள அரசுப்பள்ளி

சேதமடைந்துள்ள அரசுப்பள்ளி

Cuddalore District : குடிநீர் வசதி இல்லாததால் வெளியில் சென்று குடிநீர் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளதாகவும், இப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கழிவறையும் செயல்படாமல் பூட்டியே கிடப்பதாக கூறும் மாணவிகள் இயற்கை உபாதைகளுக்காக பள்ளியில் படித்துவரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
    விருத்தாசலம் அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் படிக்கும் நிலை உள்ளதாக மாணவ, மாணவிகள் வேதனையுடன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 2008ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    இப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களான காட்டுமயிலூர் , மாளிகைமேடு , மருவூர் , சேதுவாரயன்குப்பம் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 220 மாணவ மாணவிகளும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 210 மாணவ மாணவிகளும் மொத்தம் 430 பேர்  இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.



    ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள 220 மாணவர்களுக்கு இரண்டு சிறிய வகுப்பறைகள் கூடிய கட்டிடமும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 220 மாணவர்களுக்கு இரண்டு சிறிய வகுப்பறைகள் கூடிய கட்டிடம் மட்டுமே உள்ளதால் பிற மாணவர்கள் அனைவரும் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.



     

    மேலும் இப்பள்ளியில் அடிப்படை வசதியான பெண் குழந்தைகளுக்கு கழிப்பறைகள் குடிநீர் வசதி இல்லாததால் வெளியில் சென்று குடிநீர் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளதாகவும், இப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கழிவறையும் செயல்படாமல் பூட்டியே கிடப்பதாக கூறும் மாணவிகள் இயற்கை உபாதைகளுக்காக பள்ளியில் படித்துவரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளதாகவும் கூறுகின்றனர்.



    மேலும் பள்ளி வளாகத்தில் கால்நடைகள் கட்டப்படுவதால் கால்நடைகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட வேண்டிய மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.



    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மரத்தடியிலும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் தங்களுக்கு அரசு உடனடியாக பள்ளியில் குடிநீர் வசதி கழிவறை வசதி வகுப்பறை வசதி  அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் : பிரேம் ஆனந்த் , கடலூர் மாவட்டம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Cuddalore

    அடுத்த செய்தி