தாய் கோழிக்கு நீதி வேண்டி காவல்நிலையம் வந்த சிறுமி
தாய் கோழிக்கு நீதி வேண்டி காவல்நிலையம் வந்த சிறுமி
கோழியுடன் காவல்நிலையம் வந்த சிறுமி
Cuddalore : கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோழியின் உரிமையாளர் தாய் கோழிக்கு நீதி வேண்டி காவல் நிலையத்தில் புகார்
கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் கோழியுடன் வந்து பெண் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்காமன். இவர் தனது வீட்டில் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் கோழி ஒன்று முட்டையிட்டு சமீபத்தில் குஞ்சு பொறித்தது. பிறந்த 10 நாள்களே ஆன கோழிக்குஞ்சுகளை பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது.
கதிர்காமனின் பெண் குழந்தை விசாகா இந்த கோழிக்குஞ்சுகளை ஆசையுடன் பராமரித்து வந்துள்ளார். கோழிக்குஞ்சுகளை விஷம் வைத்து கொன்றதால் சிறுமி ஏமாற்றம் அடைந்துள்ளார். கோழியினை வளர்த்து வந்த பெண் குழந்தை தனது தந்தையுடன் தாய் கோழிக்கு நீதி வேண்டி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தாய் கோழி மற்றும் இறந்துபோன கோழிக்குஞ்சுகளுடன் சிறுமி வந்து தனது புகாரை அளித்தார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.