கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்க வேண்டும்.. தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க பொதுச் செயலாளர் வேண்டுகோள்...

கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்க வேண்டும் என்றும் கரும்பு விலை நிர்ணயம் செய்திட முத்தரப்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்க வேண்டும் என்றும் கரும்பு விலை நிர்ணயம் செய்திட முத்தரப்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

  • Share this:
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் ,பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கூட்டத்தில் கலந்த கொண்டனர். கூட்டத்திறக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன்,"  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்ற தேர்தலின் போது ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப் பட்டது. கரும்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் 2021-22 பருவ கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 அறிவித்து மாநில அரசு வழங்கிட‌ வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் ,”  2020-21 ல் அரவை செய்த கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் டன்னுக்கு ரூ.2707.50 மட்டுமே தருகிறார்கள். எனவே மாநில அரசு ஊக்கத்தொகையாக ஒரு டன் கரும்புக்கு ரூ 142.50 நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் . தமிழகத்தில் 2013 -2017 வரைக்கும் கடந்த அரசு அறிவித்த மாநில அரசுக்கான பரிந்துறை விலையினை விவசாயிகளுக்கு தரவில்லை. அதிகபட்சமாக 1713 கோடி பாக்கி உள்ளது. எனவே தற்போது உள்ள தமிழக அரசு தனியார் சர்கரை ஆலை நிர்வாகம் தரவேண்டிய மாநில அரசுக்கான பரிந்துறை விலையினை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர்,” அம்பிகா , ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வரை கரும்பு பண பாக்கியை வைத்து விட்டு ஆலையை மூடிவிட்டனர். கரும்பு விவசாயிகள் மற்றும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் ‌ரூ 500 கோடி வரை கடன் பெற்று ஆலை நிர்வாகம் எடுத்துக் கொண்டது. இதன் மீது கடலூர் ‌, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆலை நிர்வாகத்தின் மீது ‌மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும்,” முன்னுரிமை அடிப்படையில் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு பண பாக்கியை பெற்றுத்தர வேண்டும். அம்பிகா , ஆரூரான் சர்க்கரை ஆலைகளை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும்” என கேட்டுக் கொள்வதாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க...வீராணம் ஏரியை வந்தடைந்த காவிரி நீர்.. விவசாயிகள் மகிழ்ச்சி..   

கொரோனா 2-வது அலையில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டுவிழா..

கரும்பு விலை நிர்ணயம் செய்திட முத்தரப்பு கூட்டத்தை நடத்திட கோரிக்கை

சர்க்கரை ஆலைகள்  மாதா மாதம்‌ சர்க்கரையை விற்பனை செய்திட கோட்டா முறையை மத்திய அரசு  செயல்படுத்தி வருகிறது. இதனால் உற்பத்தி செய்த சர்க்கரையை விற்பனை செய்திட முடியாமல் சர்க்கரை மூட்டைகளை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் வாங்கி கரும்பு பண பாக்கியை  தருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் பெரும் தொகையை வட்டியாக வங்கிகளுக்கு செலுத்தியுள்ளன. சர்க்கரை ஆலைகள் சர்க்கரையை விற்பதற்கு மத்திய அரசு விதிக்கும் கோட்டா முறையை தமிழ்நாட்டிற்கு ரத்து செய்திட வேண்டும் என மத்திய அரசை‌ மாநில அரசு நிர்பந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Published by:Vaijayanthi S
First published: