Home /News /tamil-nadu /

தமிழகத்தில் முதன்முறையாக ரூ.100ஐ கடந்தது டீசல் விலை!

தமிழகத்தில் முதன்முறையாக ரூ.100ஐ கடந்தது டீசல் விலை!

டீசல் விலை

டீசல் விலை

கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் டீசல்  ரூ.100.29க்கு விற்பனை செய்யப்படுகிறது. காட்டுமன்னார் கோவில் பகுதியிலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 100 ரூபாயை கடந்தது. 

  • News18 India
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் டீசல் விலை ரூ.100ஐ கடந்துள்ளதால் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்,டீசல் ஆகியவற்றின் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை அதிகரித்து வருகிறது.

    பெட்ரோல் விலை நாடு முழுவதும்  100 ரூபாயை கடந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போது வெளியிட்ட அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக திமுக அரசு பெட்ரோலின் விலையில் ரூ.3ஐ குறைத்தது. இதை தொடர்ந்து அதன் விலை ரூ.100க்கு கீழ் வந்தது. எனினும், தொடர் விலையேற்றம் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளது.  கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் டீசல்  ரூ.100.29க்கு விற்பனை செய்யப்படுகிறது. காட்டுமன்னார் கோவில் பகுதியிலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 100 ரூபாயை கடந்தது. கடலூரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.104.16, டீசல் விலை ரூ 99.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க: சனி, ஞாயிறு சசிகலா அதிரடி திட்டம்... பாதுகாப்பு கேட்டு போலீசிடம் மனு...

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ 98.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 105.87 ஆக உள்ளது. சேலத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.98.27க்கும்  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.42க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலை ரூ.100ஐ கடந்துள்ளதால் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் படிக்க: இந்திய நடுத்தர வர்க்கத்தினரிடம் பணம் இருக்கிறது - அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

    Published by:Murugesh M
    First published:

    Tags: Cuddalore, Diesel Price, Petrol Diesel Price

    அடுத்த செய்தி