பண்ருட்டியில் காதல் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்ந்ததால் துக்கத்தில் கணவர் பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுபிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் மோகன்ராஜ் இவருக்கும் பணிக்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்த எஸ்டர் சந்தியா இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மோகன்ராஜ் எஸ்டர் சந்தியா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் எஸ்டர் சந்தியா நீதிமன்றத்தில் விவாகரத்து குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் காதல் மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் சோகத்தில் கடந்த 20ஆம் தேதி மோகன்ராஜ் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இத்தகவல் அறிந்த மோகன்ராஜ் உறவினர்கள் மோகன்ராஜ் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மோகன்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மோகன்ராஜ் கண்ணீர் மல்க பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பண்ருட்டி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.