கடலூரில் சோதனையின் போது பொய் கூறி சிக்கிய குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எஸ்.பி...

கடலூரில் சோதனையின் போது பொய் கூறி சிக்கிய குடும்பம்

கடலூர் அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மருத்துவமனைக்கு செல்வதாக பொய் கூறிய தம்பதியரை, போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • Share this:
    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசியம் இன்றி மக்கள் வெளியே வரக்கூடாது என்றும், மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இந்நிலையில் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் மேற்பார்வையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை மறித்த போது, அதில் பட்டுப்புடவை அணிந்த பெண் உட்பட ஐவர் இருந்தனர். போலீசாரை கண்டதும் பதறிய அவர்கள், பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனைக்கு செல்வதாகவும் கூறினர்.

    மேலும் படிக்க...Visakhapatnam | ஹைதராபாத்தில் இருந்து ஒடிசாவிற்கு சென்ற படகு விபத்து.. சொந்த ஊருக்கு செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர் மாயம்..

    சந்தேகம் அடைந்த காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், தம்பதியரை ஆம்புலன்சில் ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். எஞ்சிய 3 பேரையும் இறக்கிவிட்டதுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.



    கையும், களவுமாக சிக்கிக் கொண்ட தம்பதியர், கடலூர் மருத்துவமனைக்கு சென்றதும், தாங்கள் திருமண வீட்டுக்கு சென்று வருவதாக போலீசாரிடம் உண்மையை ஒப்புக் கொண்டனர். இதுபோன்ற தவறை இனி செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    இந்நிலையில் கடலூர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் கூறியுள்ளார். முழு ஊரடங்கிற்கு மக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அபிநவ் கேட்டுக் கொண்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: