Home /News /tamil-nadu /

வரதட்சணை கொடுமை.. கர்ப்பிணிக்கு கஷாயம் எனக் கூறி கருக்கலைப்பு மருந்து கொடுத்த கொடூரம்

வரதட்சணை கொடுமை.. கர்ப்பிணிக்கு கஷாயம் எனக் கூறி கருக்கலைப்பு மருந்து கொடுத்த கொடூரம்

கடலூர்

கடலூர்

Cuddalore | வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது உண்மையென தெரிய வந்ததைத் தொடர்ந்து கணவர் ஐயப்பன், மாமியார் மல்லிகா மற்றும் இரண்டு நாத்தனார்கள் மீது வழக்குப்பதிவு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கடலூரில் பெண் வன அலுவலருக்கு வரதட்சணை கொடுமை... கஷாயம் என சொல்லி கருக்கலைப்பு மருந்து கொடுத்த கொடூரம், கணவன் - மாமியார் கைது.

கடலூர் திருப்பாதிரி புலியூரைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் வனஅலுவலராக பணியாற்றி வரும் 29 வயது பெண்ணிற்கும் கடந்த ஆண்டு மே மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் கணவர் வீட்டில் 25 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கூடுதலாக வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை திட்டி மனவேதனைக்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.

Also Read: கஞ்சா பழக்கம்.. மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. நிர்வாண வீடியோ - ஆவடி இரட்டை கொலையும் அதிரவைக்கும் பின்னணியும்

இந்நிலையில், அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு கஷாயம் போன்ற திரவத்தை கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளனர். இதில், அவரின் கர்ப்பம் கலைந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் வன அலுவலர் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Also Read: கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. ஆந்திராவில் மீட்ட போலீஸ்

இதில், பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது உண்மையென தெரிய வந்ததைத் தொடர்ந்து கணவர் ஐயப்பன், மாமியார் மல்லிகா மற்றும் இரண்டு நாத்தனார்கள் மீது வழக்குப்பதிவு செய்து கணவர், மாமியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Cuddalore, Police, Pregnant

அடுத்த செய்தி