திமுக கடலூர் எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை செய்த கோவிந்தராஜ் என்ற ஊழியரை அடித்துக் கொன்றதாக எம்.பி. ரமேஷ் மீதும், மேலும் ஐவர் மீதும் சிபிசிஐடி போலீஸ் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையடுத்து நேற்று (அக்டோபர் 9) காலை இவ்வழக்கில் தொடர்புடைய நடராஜன், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், சுந்தர் என்கிற சுந்தர் ராஜன் ஆகிய ஐந்து பேரை கடலூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி அதையடுத்து விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எம்.பி. ரமேஷை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய குற்றவாளியாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் வி எஸ் ரமேஷ் உள்ளார் அவரை இதுவரை கைது செய்யவில்லை.
எனவே முக்கிய குற்றவாளியான கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உடனடியாக கைது செய்ய கோரி பாமக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி இடம் கோரிக்கை மனு அளித்தனர்
இந்த நிலையில் இன்று பாமக சார்பில் திமுக எம்.பி ரமேஷ் உடனடியாக கைது செய்ய கோரி 12 ம் தேதி கடலூரில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பாமக மாநில துனை பொதுசெயலாளர் முத்துகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.