Home /News /tamil-nadu /

பெண் குழந்தை வேண்டாம்.. முதல் மனைவி இருக்கும்போதே 2வது திருமணம்: காவல் நிலையத்தில் பெண் தர்ணா

பெண் குழந்தை வேண்டாம்.. முதல் மனைவி இருக்கும்போதே 2வது திருமணம்: காவல் நிலையத்தில் பெண் தர்ணா

பெண் தர்ணா

பெண் தர்ணா

கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தற்போது, பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில், பெண் குழந்தை வேண்டாம் என கூறி மீண்டும் மனைவி சுபாவிடம் தகராறு  செய்துவிட்டு வெங்கடேசன் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவதாக திருமணம் செய்த கணவரை தன்னுடன் சேர்த்துவைக்குபடி  பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்க மறுத்ததால் காவல் நிலையம் முன்பு அவர் தர்ணா இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி அம்சவல்லி தம்பதியின்  மூத்த மகள் சுபா என்பவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட சாவடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்துள்ளது.  வெங்கடேசன் சுபா  தம்பதிக்கு 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    மேலும் தற்பொழுது ரக்ஷி்தா என்ற பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில், பெண் குழந்தை வேண்டாம் என கூறி மீண்டும் மனைவி சுபாவிடம் தகராறு  செய்துவிட்டு வெங்கடேசன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். விருத்தாசலத்தில் உள்ள செங்கல் சூளையில் ஓட்டுநராக  வெங்கடேசன் வேலை பார்த்து வரும்நிலையில், செங்கல் சூளையில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி அருகே உள்ள தொழுதூர் கிராமத்துக்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார்.

    இந்நிலையில் அக்கிராமத்தில் உறவுக்காரரான பெண்ணான மகாலட்சுமியுடன் வெங்கடேசனுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். தற்போது மகாலட்சுமி மூன்று மாத கர்ப்பிணியான உள்ள நிலையில், இந்த திருமணம் குறித்து முதல் மனைவியான  சுபாவுக்கு தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: போலீஸை இங்க வரச்சொல்லு..! காவல் நிலையம் எதிரே ரத்தம் சொட்டச் சொட்ட படுத்து உருண்ட மதுப்பிரியர்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு


    இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுபா புகார் அளிக்க வந்துள்ளார். புகாரை ஏற்க மறுத்ததால் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் சுபா தர்ணாவில் ஈடுபட்டார். அப்பொழுது ஆய்வாளர் ரேவதி வாகனத்தில் அமர்ந்தபடியே புகாரை வாங்கிக் கொண்டு விசாரணை செய்கிறோம் என்று தெரிவித்தார். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சுபா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Cuddalore, Husband Wife

    அடுத்த செய்தி