தமிழகத்தைச் சேர்ந்த 27 வயதான ஐஸ்வர்யா, மிகச் சிறிய வயதில், பெற்றோரை இழந்தவர். தத்தெடுத்து வளர்த்த தந்தையும் இறந்த நிலையில், தனது திறமையால், சிங்கப்பூரில் சிறுவர், சிறுமியருக்கான நடனப் பயிற்சியாளராக 2017ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
தற்போது அபாய வளைவு, வழித்துணை காதலி ஆகிய இரண்டு திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். ஐஸ்வர்யா சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், அங்கு ஆட்டோ மொபைல் பொறியாளராகப் பணியாற்றி வந்த 29 வயதான அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது காலத்தில் அந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது
2019ம் ஆண்டு தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டத்திலுள்ள முடசல் ஓடை கிராமத்திற்கு, ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றுள்ளார் அருண். அங்கு அருணின் பெற்றோர் சம்மதத்துடன் அருகே உள்ள கோயிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது.
திருமணமாகி 3 மாதங்கள் ஆன நிலையில், அருண் குடும்பத்தாருடன் ஐஸ்வர்யாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அருண், தனது மனைவியுடன் சென்னை சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
பின்னர் வேலைக்காக மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார். அப்போது அருணின் குடும்பத்தார், ஐஸ்வர்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு வார்த்தைகளால் வாட்டியுள்ளனர்.
இதற்கிடையே சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய அருண், சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதன்பின், பாலியல் தொழிலில் ஈடுபட வருகிறாயா என மனைவியை அழைக்க, அதிர்ச்சியான ஐஸ்வர்யா மறுத்துள்ளார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யாவை பாலியல் தொழிலுக்காக தனது நண்பர்களிடம் விற்க அருண் முயற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது. அதை அறிந்த ஐஸ்வர்யா அச்சமடைந்து, க,டலூரில் உள்ள கணவனின் வீட்டுக்கு சென்றுள்ளார்
ஆனால் அங்கோ, மாமனார், மாமியார், ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்தும் மண்ணெண்ணெய் ஊற்றியும் கொல்ல முயற்சி செய்துள்ளனர். பின்னர் சிங்கப்பூர் சென்ற ஐஸ்வர்யா, 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கடலுார் திரும்பியுள்ளார்.
இந்த முறை, ஐஸ்வர்யா இரவில் துாங்கும் போது ஆடையின்றி வீடியோக்கள் எடுத்துள்ளார் அருண்; அவற்றைக் காண்பித்து, ஐஸ்வர்யாவை மிரட்டியுள்ளார்.
இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா, இதுகுறித்து விசாரித்த போது, திருமணமான நாள் முதல் அவருக்கு அருண் துாக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகக் கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அப்போதில் இருந்தே அருண் இதுபோன்று வீடியோ எடுத்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருண் வீட்டில் இருந்து தப்பி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தன் கணவன் அருணிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படியும் அவரால்
பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். கட்டிய கணவனை நம்பி சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த இந்தக் கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.