கைவசம் 4 எம்.எல்.ஏ.. எங்ககிட்டயேவா! போலீசை மிரட்டிய விசிக வழக்கறிஞர்

வாக்குவாதம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த என் மீதே வழக்குப் பதிவு செய்வீர்களா என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

  • Share this:
எங்ககிட்ட 4 எம்எல்ஏ இருகாங்க எங்களையே தடுத்து வழக்கு போடுவீயா? என கடலூரில் காவலர்களிடம் தகாத வார்த்தையில் விசிக பிரமுகர்  மிரட்டிய  வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மீனாட்சி பேட்டை ஜங்ஷனில்  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  அவ்வழியாக  முகக் கவசம் அணியாமலும் வேகமாகவும் வந்த காளிதாஸ் என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  காவல்துறையினர் தடுத்த பொழுது  அவர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட காளிதாஸ், தான்  ஒரு வழக்கறிஞர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி நகர செயலாளராக உள்ள பாலமுருகனின் தம்பி என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனது வாகனத்தை  தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான தன் மீதே வழக்குப் பதிவு செய்வீர்களா என்றும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அரசாணை - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வேல்முருகன்!


எங்கள் கைவசம் 4 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க:காவல்துறையினரை  பணி செய்ய விடாமல் தகாத வார்த்தையில் திட்டிய காளிதாஸ் ஓருக்கட்டத்தில், “ நானும் வழக்கறிஞர் தான். உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள். என் மீது வழக்கு போட்டுகொள்ளுங்கள். எங்கள் கைவசம் நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்” என்றும் அடாவடியாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஆளுங்கட்சி நாங்க... டாஸ்மாக் கடையில் கடனுக்கு மதுபானம் கேட்டு காங்கிரஸ் பிரமுகர் வாக்குவாதம்!


இதனையடுத்து குறிஞ்சிப்பாடி போலீசார் காளிதாஸ் மீது பணி செய்ய விடாமல் தடுத்தது ,முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்தது, அதிகாரிகளை ஒருமையில் பேசியது ஆகியவை தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
Published by:Murugesh M
First published: