சர்வதேச மையமாகும் வள்ளலார் சத்திய ஞான சபை: பணிகள் விரைவில் தொடங்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

வடலூர் சத்திய ஞான சபை

வள்ளலார் சத்திய ஞான சபையை சர்வதேச மையமாக அமைக்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தற்போது திமுக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில்,   வடலூர் சத்திய ஞான சபையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்

  • Share this:
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையை சர்வதேச மையமாக அமைக்க விரைவில்  பணிகளை  துவங்க உள்ளதாக  இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான அமைந்துள்ளது.   இறைவன் ஒளி வடிவில் அருள்பாளிக்கிறார் என்பதை உணர்த்தவே வள்ளலார் இதனை உருவாக்கதாக கூறப்படுகிறது. ஆண்டு தோறும் ஏராளமானோர் இங்கு வங்கு ஜோதி வடிவிலான இறைவனை தரிசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், வள்ளலார் சத்திய ஞான சபையை சர்வதேச மையமாக அமைக்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தற்போது திமுக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில்,   வடலூர் சத்திய ஞான சபையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

பின்னர் அவர்  சத்திய ஞானசபை, தர்மசாலை, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வேளாண்துறை அமைச்சர்  பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர்  பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க.. மூட நம்பிக்கையால் 10 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த எம்.எல்.ஏ. அலுவலகம் மீண்டும் திறப்பு..

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில் வடலூர் சத்திய ஞான சபையை சர்வதேச மையமாக அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இதற்காக உலகளாவிய  அளவில் வரைபடம் கோரப்பட்டுள்ளது..அது வந்தவுடன் தமிழக முதல்வர் தலைமையில் எது சிறந்தது என ஆய்வு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
Published by:Murugesh M
First published: