முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனாவால் பாதிப்பு: மணற்சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி ஆசிரியர்!

கொரோனாவால் பாதிப்பு: மணற்சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி ஆசிரியர்!

விழிப்புணர்வு மணற்சிற்பம்

விழிப்புணர்வு மணற்சிற்பம்

தனது குடும்பத்தில் ஏழு பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ள ஓவிய ஆசிரியர், தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மணற்சிற்பம் வடித்துள்ளார்.

  • Last Updated :

கடலூரில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னை போன்று மற்றவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கமானது குறைந்தாலும் இன்னும் மூன்றாம் அலை தாக்கும் அபாயமானது அதிகமாகவே உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. தடுப்பூசி  செலுத்திக்கொள்வதும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவதுமே கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளும் ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கொரோனாவை விரட்டுவதற்கான வழிகளையும் ,வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்  விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: சுமார் 7 லட்சம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் - ரிஜெக்ட் எத்தனை தெரியமா?

இதன் ஒரு பகுதியாக கடலூர் முதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் சாமுவேல் முதுநகர் கடற்கரையில் உள்ள கடல் மண்ணில் கொரோனா விழிப்புணர்வு மணற் சிற்பத்தினை  வடித்துள்ளார். மணற்சிற்பத்தில் முகக்கவசம் அணிந்தால் ராஜாவாக வாழலாம் இல்லையெனில் மரணம் நிகழும் என்பதை விளக்கும் வகையில் முகத்தின் ஒரு புறம் கிரீடத்துடன் ராஜா உருவமும் மற்றொரு புறம் மண்டை ஓட்டின் உருவமும் வடித்துள்ளார்.

மேலும் படிக்க: கோடநாடு வழக்கு : புதிய விசாரணைக்கான பின்னணி என்ன ?

இந்த கொரோனா காலகட்டத்தில் ஓவிய ஆசிரியர் குடும்பத்தில் உள்ள  நெருங்கிய சொந்தங்களில் மொத்தம் ஏழு பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். ஓவிய ஆசிரியர் சாமுவேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிறிது நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், இதற்கெல்லாம் முக்கிய காரணம் மக்களின் அலட்சியம் தான் என்பதை உணர்ந்து, தனக்கு நேர்ந்த துன்பம் மற்றவர்களுக்கு நேர்ந்துவிடக்கூடது என மணற்சிற்பத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதை அந்த பகுதி மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்

top videos

    இவர் கடந்த ஜனவரி மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற உலகளாவிய மணற்சிற்ப போட்டியில் பங்கேற்று உள்ளார் என்பது குறிபிடத்தக்கது

    First published:

    Tags: Corona, Cuddalore