• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மீனவ கிராமங்களில் அமைதி பேச்சுவார்த்தை நடத்திவரும் கடலூர் எஸ்.பி.!

மீனவ கிராமங்களில் அமைதி பேச்சுவார்த்தை நடத்திவரும் கடலூர் எஸ்.பி.!

அமைதி பேச்சுவார்த்தை

அமைதி பேச்சுவார்த்தை

கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மத்தியில் அவ்வப்போது மோதலும் ஏற்பட்டு வருகிறது. மீனவர்கள் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  • Share this:
கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் விதமாக மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் கிராமம் கிராமமாக சென்று அமைதி பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் 49 மீனவர் கிராமங்கள் உள்ளன. இதில், சில மீனவ கிராமத்தினர் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீனபிடித்து வருகின்றனர். இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறி சுருக்குமடி வலையினை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிற மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலையினை பறிமுதல் செய்து நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள், அதிக பின்னல் கொண்ட இழுவை வலையினையும்  அனுமதிக்கப்பட்டதை விட குறைவான அளவை கொண்டுள்ள வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துவருவதால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Must Read: வலையில் சிக்கிய நண்டை மீண்டும் கடலில் விட்டால் பரிசு: விநோத அறிவிப்புக்கு காரணம் என்ன?


இதனால், மாவட்டத்தில் மீனவர்கள் மத்தியில் அவ்வப்போது மோதலும் ஏற்பட்டு வருகிறது. மீனவர்கள் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் விதமாக, மீனவர்கள் இடையே பேச்சுவார்த்த நடத்த மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.

இதையும் படிங்க: வெளிநாட்டு நாற்று வகைகளால் கால்நடைகளுக்கு கருச்சிதைவு!


அதன்படி கடலூர் சில்வர் பீச் அருகேயுள்ள தேவனாம்பட்டினம் மீனவர் கிராமத்தில் மீனவ பிரதிநிதிகள், பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் சந்தித்து பேசினார்.

அப்போது அவர்,  மீனவர்கள் தங்களுக்குள் தொழில் ரீதியான பிரச்னைகளை பேசி தீர்வு காண வேண்டும். அதற்கு கிராம அளவில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அமைதிக்கு முதற்கட்டமே அவரவர் தவறுகளை ஒத்துக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்தவும், அதிலிருந்து மீளவும் விட்டுக் கொடுக்க வேண்டும். தொழில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக அமைதி தேவை” என்று வலியுறுத்தினார்.

மேலும் படிக்க: கைவசம் 4 எம்.எல்.ஏ.. எங்ககிட்டயேவா! போலீசை மிரட்டிய விசிக வழக்கறிஞர்!


மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிக்குழு ஏற்படுத்தப்படும் என்றும் அதில், அனைத்து கிராமத்தினரின் பிரதிநிதித்துவம் இருக்கும். எனவே, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.

சோனாங்குப்பம், ராசாபேட்டை போன்ற கிராமங்களில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அவர், மேலும் சில கிராமங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: