• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாதாரண பட்டன் செல்போனில் பாடம் படிக்கின்றனர் கடலூர் பள்ளி மாணவர்கள்...எப்படி?

சாதாரண பட்டன் செல்போனில் பாடம் படிக்கின்றனர் கடலூர் பள்ளி மாணவர்கள்...எப்படி?

Youtube Video

விலை உயர்ந்த செல்போன், அதிவேகம் கொண்ட இணையவசதி இல்லாமல், சாதாரண பட்டன் செல்போனில் பாடம் படிக்கின்றனர் கடலூர் மாவட்டம் கத்தாழை கிராம பிள்ளைகள். எப்படி இது சாத்தியப்படுகிறது? 

  • Share this:
    புவனகிரி அருகே கத்தாழை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், சுமார் 140 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருக்க, மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டுமென சிந்தித்த இந்த பள்ளியின் ஆசிரியர் கார்த்திராஜா, ஆன்லைன் கல்வி ரேடியோவை இணையதளம் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். இதன்மூலம் சாதாரணமான செல்போனில், 2ஜி இணைய வசதியிலேயே மாணவர்களால் கல்வி பெற முடிகிறது.

    மற்ற ஆசிரியர்கள் உதவியோடு பாடங்களை ரெக்கார்டு செய்து www.kalviradio.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றி, எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களின் செல்போன்களுக்கு அனுப்புகி்றார் கார்த்திக்ராஜா. அந்த லிங்க்-கை சுட்டினால், மாணவர்களால் பாடங்களை கேட்க முடிகிறது. செல்போன் இல்லாத மாணவர்களுக்கு செல்போனும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கார்த்திக்ராஜா.

    வெறும் பாடங்கள் மட்டும் அல்லாமல், கதை, விடுகதை, பழமொழி, திருக்குறள், நல்லொழுக்க கருத்துக்கள் போன்றவையும் ஒலி வடிவில் மாணவர்களை வந்தடைகிறது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... Tsunami | 16 ஆண்டுகளாக அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் தவிப்பு.. சுனாமி பேரலையில் சிக்கி மீண்டவரின் கதை...

    தொடக்கத்தில் இந்தப் பள்ளி மாணவர்கள் மட்டும் கல்வி ரேடியோவில் படிக்க, இதனை பார்த்த மற்ற பள்ளி ஆசிரியர்களும் கார்த்திக்ராஜாவோடு கரம் கோர்த்துள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 80 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பாடங்களை தயாரித்து இந்த கல்வி ரேடியோ இணையதளத்தில் வெளியிடுகின்றனர். இதன் மூலம் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: