யூ டியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரிப்பு: கடலூரில் இருவர் கைது!

கைது

  • Share this:
கடலூர் அருகே யூ டியூப்  பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கடலுார் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீசார் பெருமாள் ஏரிக்கரையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கிடமாக சுற்றிதிரிந்த இருவரிடம் நடத்திய சோதனையில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது.  துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று போலிசார் விசாரத்திபோது ஏரிக்கரையில் முயல் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாட  இந்த துப்பாக்கியை வைத்துள்ளதாகவும்,  யூடியூப் பார்த்து  மரக்கட்டை, இரும்பு பொருட்களை கொண்டு தாங்களே நாட்டு துப்பாக்கி தயாரித்ததாகவும்  ஒப்பு கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து குள்ளஞ்சாவடி  பெரியகாட்டு சாகை பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி மகன் விஜய் (28) காளிதாஸ் மகன் கவியரசன்(21) ஆகியோரை  போலீசார்  கைது  செய்தனர். கவியரசன் பி.ஏ. , பட்ட தாரி ஆவார் . அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் , ரவை மேலும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய  மரக்கட்டை, சுத்தி, உளி, இழைப்பான் உட்பட பெருட்களையும் போலீசார்  பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி: மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன்...


யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சுவது, நாட்டு வெடிகுண்டு செய்வது, துப்பாக்கி செய்வது என்று தற்போது சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களை நல்லதுக்கு பயன்படுத்தாமல் தற்போது குற்றங்கள் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளதான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.  அதனால் சமூக வலைதளங்களுக்கு கட்டுபாடுகள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Murugesh M
First published: