Home /News /tamil-nadu /

காதலியுடன் ஆடம்பரமாக வாழ மூதாட்டி கொலை.. கல்லூரி மாணவர் கைது

காதலியுடன் ஆடம்பரமாக வாழ மூதாட்டி கொலை.. கல்லூரி மாணவர் கைது

கல்லூரி மாணவர் கைது

கல்லூரி மாணவர் கைது

வீட்டில் தனியாக இருந்த பட்டத்தாளிடம் நகைகளை பறிக்க சூர்யா முயன்றார். அப்போது பட்டத்தாள் தடுத்ததால் அவரது முகத்தை கையால் மூடி கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் நகைகளை திருடி சென்றுள்ளார். திருடிய பணத்தில் காதலியுடன் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    வேப்பூரில் காதலியுடன் ஆடம்பரமாக இருக்க  மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டம், வேப்பூரில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலக்கவுண்டர் மனைவி பட்டத்தாள் (வயது 75.) இவர், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஏப்ரல்  6ம் தேதி இவரது மகள் பார்வதி தனது அம்மா பட்டத்தாளுக்கு காபி கொடுக்க  சென்றார். அப்போது, பட்டத்தாள் கழுத்தில், கையில்  நகைகள் ஏதுமின்றி இறந்து கிடந்துள்ளார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பார்வதி போலீஸில் புகார் அளித்தார். இது குறித்து திட்டக்குடி டிஎஸ்பி சிவா உத்திரவின் பேரில் வேப்பூர் எஸ்ஐ, சந்திரா, சிறுபாக்கம் குற்றபிரிவு எஸ்ஐ, ஜம்புலிங்கம் மற்றும் போலிசார்  வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், கொலை தொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    வேப்பூர்  தெற்கு தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன்  சூர்யா,(வயது 21)  பெரம்பலூர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி., கம்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர், கடந்த 6ம் தேதி வீட்டில் தனியாக இருந்த பட்டத்தாளிடம் நகைகளை பறிக்க முயன்றார். அப்போது பட்டத்தாள் தடுத்ததால் அவரது முகத்தை கையால் மூடி கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் நகைகளை திருடி சென்றுள்ளார்.

    இதையும் படிக்க: காரைக்குடி அருகே நடந்த பாரம்பரிய ”ஊத்தா” முறை வினோத மீன்பிடித் திருவிழா


    திருடிய நகைகளை வேப்பூரிலுள்ள  அடகு கடைகளில் ரூ. 95 ஆயிரத்திற்கு அடகு  வைத்தார். அதன் மூலம் சூர்யா தனது காதலிக்கு  புதிய மொபைல் போன், துணிகளை வாங்கினார்.
    தொடர்ந்து, திருச்சியிலுள்ள தனியார்  விடுதியில் 5 மாதம் தங்குவதற்கு அட்வான்ஸ் தொகை  செலுத்தி தங்கியது தெரிய வந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடிய   சூர்யாவை கைது செய்தனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: College student, Crime News, Murder

    அடுத்த செய்தி