Home /News /tamil-nadu /

மகளுக்காக நகை கொடுக்காத ஆத்திரத்தில் மருமகளுக்கு கொடுமை.. இளம்பெண் தற்கொலை வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

மகளுக்காக நகை கொடுக்காத ஆத்திரத்தில் மருமகளுக்கு கொடுமை.. இளம்பெண் தற்கொலை வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

கடலூர் இளம்பெண் தற்கொலை வழக்கு

கடலூர் இளம்பெண் தற்கொலை வழக்கு

குழந்தை இல்லாதததற்காக மருமகளுக்கு புள்ளப்பூச்சியினை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து  சாப்பிட வைத்த மாமியார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கடலூர் புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவரின் குடும்பத்தினர் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த பழனி மகன் வினோத்குமார் (வயது 33) எலக்ட்ரிசியன். இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.2.50 லட்சத்திற்கு சீர்வரிசைப் பொருட்கள், இருசக்கரவாகனம் ஆகியவை சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆடி மாத சீராக 4 பவுன் கொடுத்துள்ளனர்.

Also Read: ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை - காவல்துறையினர் அறிவிப்பு

இந்நிலையில், வினோத்குமாரின் சகோதரி விந்தியா என்பவர் பண்ருட்டியில் வீடு கட்டுவதற்காக சூர்யாவின் 5 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளனர். இதற்கு, சூர்யா எதிர்ப்புத் தெரிவித்ததால் அன்று முதல் மாமனார் பழனி (வயது 53), மாமியார் ராஜேஸ்வரி (வயது 47), நாத்தனார் விந்தியா ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வந்ததோடு, அவருக்கு குழந்தை இல்லாததையும் குறை கூறி வந்தனராம். மேலும், குழந்தை இல்லாதததற்காக புள்ளப்பூச்சியினை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து சூர்யாவை சாப்பிட வைத்துள்ளனர்.

இதனால், கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்றவர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வினோத்குமாருடன் அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, கூடுதலாக 5 பவுன் நகை கேட்டதற்கு 4 பவுன் கொடுத்துள்ளனர். எனினும், அவருக்கு குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி 4 பேரும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதனால், மனமுடைந்த சூர்யா கடந்த 14-3-2018  அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

Also Read:  பெண்களோடு உல்லாசமாக இருக்க கொள்ளை தொழில்... பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது... 95 சவரன் நகைகள் பறிமுதல்.

இதுகுறித்து, பண்ருட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில்  நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், சூர்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பழனி, ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டுகளும், விந்தியாவிற்கு இரண்டரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Dowry, Police, Suicide

அடுத்த செய்தி