கடலூரில் அறையடி உயரத்தில் பிறந்த கன்றுக்குட்டி - தாயிடம் பால் குடிக்க முடியாத அவலம்

கடலூர் கன்றுக்குட்டி

கடலூரில் புதிதாக பிறந்த கன்றுக்குட்டி மிகவும் உயரம் குறைவாக இருப்பதால் தாயிடம் பால் குடிக்கமுடியாமல் அவதிப்பட்டுவருகிறது.

  • Share this:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நலன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் என்ற விவசாயி. இவர் வீட்டு பசுவொன்று, மூன்றாவது முறையாக கன்று ஒன்றை ஈன்றுள்ளது. ஆனால் அந்த கன்று உயரம் குறைவாக தரையோடு தரையாக தவழ்ந்து செல்லும் அளவுக்குதான் இருக்கிறது. இதனால் தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமலும் நடக்க முடியாமலும் தவித்து வருகிறது கன்று.

கன்றை பார்த்து கண்ணீர் வடிக்கிறது தாய்ப்பசு. இதனால் பசுவை வைத்திருக்கும் விவசாயி விஜயன் குடும்பத்தினர் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கெனவே இதே பசு இரண்டு கன்றுகளை ஈன்றபோது சரியான அளவில்தான் கன்றுகள் இருந்துள்ளன. இந்த கன்றுக் குட்டியை பார்க்க சுற்றுவட்டார பகுதி மக்கள் அந்த பகுதியில் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளனர். குழந்தைகளை விட மிகக் குறைவான உயரத்தில் இருப்பதால் அந்தக் கன்றுக்குட்டி மீது அந்த குடும்பத்தினர் அதிக பாசத்துடன் இருந்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பசுவிற்கு குமராட்சி அரசு கால்நடை மருத்துவமனை மூலம் கால்நடை மருத்துவரால், ஜெர்ஸி வகை சினை ஊசி செலுத்தப்பட்டு சினை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Karthick S
First published: