Home /News /tamil-nadu /

‘நான் பாஜகவிற்கு செல்லப்போகிறானா?’- கடலூர் திமுக எம்எல்ஏ விளக்கம்!

‘நான் பாஜகவிற்கு செல்லப்போகிறானா?’- கடலூர் திமுக எம்எல்ஏ விளக்கம்!

முதல்வர் ஸ்டாலினுடன் திமுக எம்எல்ஏ அய்யப்பன்.

முதல்வர் ஸ்டாலினுடன் திமுக எம்எல்ஏ அய்யப்பன்.

சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கடலூரில் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலிருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் பாஜகவுக்கு செல்லப் போவதாகச் சமுக வலைதளங்கில் செய்திகள் பரவின.

தான் பாஜகவிற்கு செல்லப்போவதாகச் சிலர் வதந்தி பரப்புகிறார்கள் எனவும் கடைசி வரை திமுகவில்தான் இருப்பேன் எனவும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ அய்யப்பன் விளக்கம் கொடுத்துள்ளார்.

கடலூர் மாநகராட்சி தேர்தலின் போது திமுக மேயர் வேட்பாளராகச் சுந்தரி என்பவரை அக்கட்சியின் தலைமை அறிவித்தது. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக கடலூரில் உள்ள திமுக நகர நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மேயர் வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியின்  மாவட்ட பொருளாளர் குணசேகரனின் மனைவி கீதா, திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார்.

பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் திமுக அறிவித்த மேயர் வேட்பாளர் சுந்தரியே வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து மேயர் தேர்தலில் திமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பனைத் தற்காலிகமாக நீக்கம் செய்வதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இதனால் அய்யப்பன் கடலூரில் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலிருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் பாஜகவுக்கு செல்லப் போவதாகச் சமுக வலைதளங்கில் செய்திகள் பரவின.

இதுகுறித்து தொலைபேசிவாயிலாக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனிடம் நியூஸ் 18 தமிழ்நாடு தொடர்புகொண்டு கேட்டபோது, சிலர் தன் மீது அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதுபோல் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள் எனவும், இறக்கும்வரை தான் திமுகவில்தான் இருப்பேன் எனவும் தெரிவித்தார்.

திமுக தலைமை தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை என்றாலும், அக்கட்சியில்தான் நீடிப்பேன் எனவும் தெரிவித்தார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Cuddalore, DMK

அடுத்த செய்தி