முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 4 வயது சிறுவன் முந்திரி தோப்பில் அடித்துக்கொலை - பண்ருட்டியில் பரபரப்பு

4 வயது சிறுவன் முந்திரி தோப்பில் அடித்துக்கொலை - பண்ருட்டியில் பரபரப்பு

சிறுவன்

சிறுவன்

Cuddalore : முந்திரி தோப்பில் பலத்த காயத்துடன் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக சிறுவன் உடலை காவல் துறையினர் கண்டெடுத்தனர்

  • Last Updated :

பண்ருட்டி அருகே முந்திரி தோப்பில் 4 வயது சிறுவன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கீழக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் அஸ்வின் (வயது 4) நேற்று மதியம் 3 மணி முதல் காணவில்லை. காணாமல் போன சிறுவனை அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் பல இடங்களில் தேடினர. ஆனால் எங்கும் கிடைக்காததால் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனை தொடர்ந்து முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அதேப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ரஞ்சிதா என்பவர்  சிறுவனை அழைத்துச் சென்றதாக தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து ஏராளமான காவல் துறையினர் மற்றும் ஊர் மக்கள் கிராமத்தை முழுவதும் சல்லடை போட்டு தேடினர் சிறுவன் எங்கும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நள்ளிரவில் சென்னை கும்பகோணம் சாலையில் கொள்ளுகரங்குட்டை பகுதியில் திடீர் சாலை  மறியலில் ஈடுபட்டனர், பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Also Read:  காதலியுடன் இளைஞர் மாயம்.. தாயை கட்டிவைத்து அடித்த கொடூரம்

இதனை தொடர்ந்து இரவு முழுவதும் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் இன்று காலை அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பலத்த காயத்துடன் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக சிறுவன் உடலை காவல் துறையினர் கண்டெடுத்தனர் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read:  2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய் - 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

top videos

    இதன் காரணமாக தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பண்ருட்டி தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர், தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Cuddalore