கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் அடுத்த வடக்கு ராமாபுரம் எஸ்.புதூர் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100 வீடுகள் உள்ள நிலையில் இந்த சமத்துவபுரம் பின்பக்கம் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டி தர தனியார் தொண்டு நிறுவனம் 2012 ம் ஆண்டு முன்வந்தது அதன் பேரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 2013 ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது. மொத்தம் 130 வீடுகள் கட்டப்பட்டது.
அந்த வீடுகள் சரியில்லை தங்களை மீண்டும் அகதிகள் போல் அடைத்து வைக்கும் நிலையில் வீடுகள் உள்ளது என கூறி அதில் இலங்கை தமிழர்கள் குடியேற மறுத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 2013 ம் ஆண்டு முதல் அந்த வீடுகள் பாழடைந்து உள்ளது.
அந்த இடத்தில் 130 வீடுகள் இருந்த நிலையில் அவ்வப்போது சமுக விரோத செயல்கள் அந்த வீடுகளில் நடைபெறுவதாக தொடர் குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில் இன்று மதியம் பாழடைந்த வீட்டிற்கு சென்ற சுதீஷ்குமார், வீரசேகரன்,புவனேஷ் ஆகிய மூன்று 17 வயது சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது பாழடைந்த அந்த வீடு திடீரென முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது.சத்தத்தை கேட்டு அதிர்நத அந்த பகுதி மக்கள்
இடிந்த வீட்டில் சிக்கி கொண்ட 3 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.மருத்துவமனை செல்லும் வழியில் வீரசேகரன், சுதீஷ் குமார், ஆகியோர் உயிரிழந்தனர். புவனேஷ் எனும் சிறுவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Also read : 4 வயது சிறுவன் முந்திரி தோப்பில் அடித்துக்கொலை - பண்ருட்டியில் பரபரப்பு
இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடலூர் மாவட்டம் இராமாபுரம் கிராமத்தில் பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் செல்வன். வீரசேகர் மற்றும் சதிஷ் உயிரிழந்த சம்பவம் கேட்டு மிகுந்த துயரடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும் ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷ்-க்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்துக்கு ரூ.50,000 முதல்மைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Children death, Cuddalore