மரக்கன்று முதல் எதை நட்டாலும் வளராத சுண்ணாம்பு மண், ஆற்றங்கரை அல்லது வாய்க்கால் பாசன வசதி கிடையாது, பாதாளம் போன நிலத்தடி நீரிலும் உப்பு, கண்ணுக்கு எட்டிய வரையிலும் வெறும் கட்டாந்தரை தான். இப்படியான ஒரு தரிசு நிலத்தை, நான்கே ஆண்டுகளில் ஒரு வனமாக, பொன் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியுமா என்ன? அதுவும் ஓய்வு பெற்ற வயதான தம்பதிக்கு இது சாத்தியமான ஒன்றா? என்ற கேள்விகளுக்கு, சாத்தியம் தான் என்று நிரூபித்துக் காட்டி சாதனை புரிந்திருக்கிறார்கள் கடலூரை சேர்த்த வயதான தம்பதியினர். அவர்களின் வெற்றிக் கதையை பார்ப்போம்.
தங்களின் முழுமையான அர்பணிப்பின் மூலம் தரிசாக கிடந்த நிலத்தை ஒரு சிறு வனமாகவே மாற்றியுள்ளனர் ஓய்வு பெற்ற இத்தம்பதியினர். இதன் மூலம், பல தலைமுறையாக தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வந்த கிராமத்தில் இன்று தண்ணீர் அபரிமிதமாக கிடைக்கிறது.. இந்த இடம், கூடுதலாக 70 குடும்பங்களுக்கு வளங்களை வாரி வழங்கும் நந்தவனமாக இருக்கிறது. கைநிறைய செல்வத்தையும், சுற்றுச்சூழல் நன்மைகளையும் ஏராளமாய் அள்ளித் தருகிறது.
கஸ்தூரி மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், கஸ்தூரி அவர்களின் சொந்த கிராமமான கடலூர் மாவட்டத்திற்கு சென்றனர். இந்த இடம், கஸ்தூரி அவர்களின் தந்தையிடம் இருந்து பெற்ற சொந்த நிலம், இங்கு வந்த பின் அவர்கள் விவசாயம் செய்யத் தொடங்கினர்.ஆனால் இந்த நிலத்தில் அவர்களுக்கு ஒரு சவால் காத்திருந்தது. “இந்த இடத்திற்கு ஆச்சர்யமாக மற்றொரு பட்டப்பெயர் கூட இருந்தது “சுண்ணாம்பு மேடு “ என்பது அந்த பெயர். இந்த நிலத்தில் வெறும் 1.5 அடி ஆழத்தில் சுண்ணாம்பு கற்களை கண்டறிய முடியும். இந்த இடம், எதற்கும் பயனற்ற தரிசாக இருந்தது. என்று நினைவு கூர்ந்தார் கஸ்தூரி.
Also Read: Hula Hooping: கின்னஸ் சாதனை படைத்த சென்னை சிறுவனை பாராட்டிய பியர் கிரில்ஸ்!
இங்கே வெறும் முட்புதர்கள், மற்றும் உள்ளூர் வாசிகள் விறகெறிக்க பயன்படுத்தும் ஒரு சில மரங்கள் மட்டுமே இருந்தன. இங்கு மண், நீர் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்துமே பிரச்சனை மிகுந்ததாகவே இருந்தது. இங்கு எதையும் விளைவிக்க முடியவில்லை.இது போன்ற ஏராளமான விஷயங்கள், அந்த தம்பதியினரிடம் சொல்லப்பட்டன. ஆனாலும் உறுதி கொண்ட நெஞ்சோடு, சோர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சித்தனர் அந்த தம்பதியினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதலில் ஒரு சில தேக்கு மரக் கன்றுகளை நட்டனர். ஆனால் அவை துளிர்க்க வில்லை. ஆழ்துளை கிணறு தோண்டினார்கள், மிகவும் வலிமையான மோட்டார் பம்புகளை வர செய்து அந்த நிலத்திற்கு நீர் பாய்ச்சினார்கள். ஆனால் அந்த நீரில் உப்புத்தன்மை அதிகமாக இருந்தது. இதில் எதுவும் முளைக்காது. ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை வாங்கி நட்டு வந்தனர். அதில் ஒரு சில மட்டுமே உயிர் பிடித்து வளர்ந்தது.
அந்த சமயத்தில், எங்கள் இடத்திற்கு அருகில் ஈஷா நர்சரி ஆரம்பித்திருப்பதை அறிந்தோம். அங்கே மரக்கன்றுகளின் விலை மலிவானதாகவும், மிக தரமானதாகவும் கிடைப்பதாக அறிந்தோம். ஒரு சில மரங்கள் உயிர் பிடித்து வளர்ந்தாலும், பெரிய அளவில் எந்த மாற்றமும் இங்கே நிகழவில்லை என கடந்து வந்த பாதையின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் கஸ்தூரி.
அவரும் அவருடைய கணவரும் ஈஷாவின் நிறுவனரான சத்குரு அவர்கள் “ஒரு மரத்தை நடுவதால் ஏற்படும் மாற்றங்கள் “ குறித்து பேசிய உரையை கேட்டிருந்தனர். அந்த உரையே, அவர்களின் முடிவில் தொடர்ந்து உறுதியாக இருக்க, அத்தம்பதினருக்கு உதவியுள்ளது.
ஒரு நாள் ஈஷா நர்சரியின் மேலாளர், நாங்கள் அடிக்கடி மரக்கன்றுகளை வாங்கி செல்வதை கவனித்தார். அதன் பின்பு, வெறும் தேக்கு மரக்கன்றுகளை மட்டும் வாங்காமல், பல்வேறு விதமான மரக்கன்றுகளை வாங்கி நடுமாறு அறிவுருத்தினார். மேலும் எங்கள் நிலத்திற்கே நேரடியாக வந்து பார்வையிட்டு பரிந்துரைகளை வழங்குவதாக கூறினார் . அவருடைய அறிவுரையின் படி அந்த தம்பதியினர் 5000 மரக்கன்றுகளை வாங்கினர்.
ஈஷாவின் தன்னார்வ தொண்டர்கள், எங்கள் நிலத்திற்கு நேரடியாக வந்து, மரக்கன்றுகள் உயிர் கொள்ளும் சதவீதத்தை அதிகரிக்க, இராசாயன உரத்திலிருந்து, இயற்கை உரத்திற்கு மாறுமாறு அறிவுருத்தினர். கீழே உதிரும் இலைகளில் இத்தனை விலைமதிப்பு மிக்க தன்மை பொதிந்திருக்கும் என்றும் அவை மண்ணின் வளத்தை மீட்டெடுக்கும் என்றும் இதுவரை தாம் அறிந்ததில்லை என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் கஸ்தூரி. மேலும், மண் மற்றும் நீர் வளத்தை அதிகரிக்க, இயற்கை உர பயன்பாடை உயர்த்த ஊடுபயிரை ( அதே நிலத்தில் பல்வேறு பயிர்களை விளைவித்தல்) விளைவிக்க அறிவுருத்தினர்.
ஊடுபயிர் விளைவதால், மரங்கள் வளர்ந்து பலன் தருவதற்கு முன்பாகவே, நாம் குறுகிய காலத்தில் வருவாய் ஈட்ட முடியும். இவையனைத்தும் செய்த பின், மரக்கன்றுகள் மிக ஆரோக்கியமாகவும் வேகமாக வளர்வதையும் காண முடிந்தது. ஒட்டு மொத்த நிலமும் மிக அதிக வனப்புடன் அழகுடனும் மாறி அற்புதமாக இருந்தது. புன்னகைத்தவாறே சொன்னார் கஸ்தூரி. நான்கு ஆண்டுகள் கழித்து, 50,000 மரக்கன்றுகளை அந்த சிறிய கிராமத்தில் நட்டிருந்தனர், 30 வகையான மர வகைகளுடன் சிறு வனமாக அந்த இடம் மாறியிருந்தது.
வற்றாத அமுதம்
பல ஆண்டுகள் முன்பு, என் தந்தை இந்த இடத்தை கைவிட முடிவு செய்தார். காரணம், இந்த நிலத்திற்கு அருகிலிருந்த கிணறு வறண்டு விட்டது. அவரும் பம்புகளை பயன்படுத்தி நீர் இறைக்க முயன்றார் ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. அவருடைய தலைமுறைக்கு பின், நாங்கள் மிக வலிமையான மோட்டார்களை பயன்படுத்தி நீர் இறைத்தோம். ஆனாலும் அது உப்புத்தன்மை அதிகமான நீராக இருந்தது “என்றார் கஸ்தூரி. ஆனால் இன்று இந்த சூழல் மாறியிருக்கிறது. சுண்ணாம்பு மேடு நீர் சுரக்கும் இடமாக மாறியிருக்கிறது. இப்போது இந்த கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. தன் ஆனந்தத்தை கட்டுப்படுத்த முடியாமல் பகிர்ந்து கொண்டார் கஸ்தூரி.
“இயற்கை அளித்த இந்த அற்புத பரிசு, இந்த மரங்கள், இந்த கிராமத்தின் ஒட்டு மொத்த சூழலையும் மாற்றிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மழையே இல்லாவிட்டால் கூட, நாங்கள் போதிய அளவிலான தண்ணீருடன் வளமாக இருக்கிறோம். பகிர்ந்தளிப்பதால் பரவும் ஆனந்தம் “இந்த நிலத்தின் மூலம் 70 குடும்பங்கள் வளமான வாழ்வை வாழ்கின்றனர் என சொல்வதில் மிகவும் ஆனந்தம் கொள்கிறேன். “என்கிறார் கஸ்தூரி.
தங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு எந்தவித விலையுமின்றி இந்த ஒட்டுமொத்த இடத்தினை சிறு சிறு பகுதிகளாக பிரித்து கொடுத்துள்ளனர் தயாள குணம் படைத்த இத்தம்பதியினர். “இந்த ஒட்டுமொத்த 75 ஏக்கர் இடத்தையும் பார்த்து கொள்ளும் வயது எங்களுக்கு இல்லை. எனவே 5 முதல் 10 ஏக்கராக பிரித்து எங்கள் உறவினர்கள் மற்றும் எங்கள் பணியாளர்களிடம் கொடுத்தோம். அதற்கான மரக்கன்றுகள், உரம் மற்றும் பணியாள் கூலி ஆகியவற்றை நாங்களே வழங்கினோம். அவர்கள் நட்டு வளர்த்து வந்தனர். அவர்களுக்கு இந்த மரங்களுக்கு இடையே ஊடு பயிர் விளைவிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இதன் மூலம் ஊடுபயிர் விளைவித்து அந்த வருவாயை அவர்கள் எடுத்து வந்தனர். மற்றும் இந்த மரங்கள் எங்களுடைய நீண்ட கால முதலீடாக இருந்தன. இப்போது இந்த விவசாயிகள் கடலை பருப்பை ஊடுபயிராக விளைவித்து ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாக ஈட்டி வருகின்றனர். “
எல்லைகளின்றி அள்ளி வழங்கும் நிலம்
இந்த மரங்கள் தற்போது வளர்ந்து விட்டன. இதற்கென பிரத்தியேக கவனிப்பு இப்போது அவசியமில்லை. அவற்றை விற்பனை செய்த பின்னும் மீண்டும் வளர்கின்றன. முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு மரம் தோராயமாக 15,000 முதல் 20,000 வரை மதிப்பு பெரும். 30,000 இருந்த இடத்தின் மதிப்பு இந்த நான்காண்டுகளில் ரூ.6,00,000 வரை உயர்ந்துள்ளதாக கஸ்தூரி கூறினார். “மிக முக்கியமாக, எப்போதெல்லாம் இந்த மரங்களை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் எங்களுக்குள் ஆனந்தம் பெருக்கெடுக்கிறது. கோடை காலத்தில் கூட, இங்கே நிலவும் குளுமையும், இம்மரங்களின் நிழலில் அமர்வதும் அற்புதமானது.
அபரிமீதத்தை அள்ளி வழங்குதல்
“இந்த பணியில் இன்னும் பல கிராம மக்களை ஈடுபடுத்துமாறு ஈஷா எங்களுக்கு அறிவுறுத்தியது. எங்களுக்கு சத்குரு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் இந்த விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த, சத்குரு அவர்களின் தீவிரத்தை உணர ஈஷா தன்னார்வலர்களின் தொடர்பே எங்களுக்கு போதுமானதாக இருந்தது. “என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் கஸ்தூரி.
கஸ்தூரியும் அவரது கணவரும் இந்த பணியை தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்து அவரோடு இருக்கும் ஆதரவற்ற பெண் பாஞ்சாலி. அவர் கூறும் போது “பல வருடங்கள் முன்பு, ஒரு நாள் கஸ்தூரி அம்மா என்னிடம் நூறு ரூபாயை கொடுத்து, இந்த நிலத்தையும் கொடுத்தார். கொடுத்துவிட்டு சொன்னார், “பாஞ்சாலி இந்த இடத்தை நன்றாக கவனித்து கொள். ஒரு நாள் உன்னை பெருமையோடு இந்த நிலம வாழ வைக்கும். இங்கு என்ன விளையும், என்ன விளையாது என்றெல்லாம் கவலை படாதே. உன் பணியை மட்டும் செய் “ என்றார்.
எனக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது என்னுடைய மொத்த குடும்பமும் இன்று இதன் மூலமே வாழ்ந்து வருகிறது. இப்படியொரு வாழ்வை வாழ்வேன், என்று கனவிலும் நான் நினைக்கவில்லை “சிறுகிராமத்தை சேர்ந்த விவசாயி என். இராமமூர்த்தி இவரிடமும் ஊடு பயிர் செய்வதற்காக சில நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர் கூறும் போது, “நாங்கள் இன்று நன்றாக வாழ்கிறோம். இதற்காக எந்நாளும் கஸ்தூரி அம்மாவிற்கும், பாஸ்கரன் அப்பாவிற்கும் நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம். இவர்கள் எங்களுக்கு சிவனும் பார்வதியும் போல. பணியாள் கூலி முதற் கொண்டு கொடுத்து விடுவார்கள். களை பறிக்க, நீர் பாய்ச்ச பலரை பணிக்கு அமர்த்தி நல்லதொரு வருவாயை ஈட்டுகிறோம் “என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore, Forest, Isha yoga centre, Tree plants