அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்து முகநூலில் அவதூறு கருத்து தெரிவித்தும் கொலை மிரட்டல் விடுத்தும் பதிவிட்டு வந்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் நகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா நேற்று கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பற்றி கடலூர் எஸ்.என்.சாவடி டி.எஸ்.ஆர். நகரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (வயது 51) என்பவர் முக நூலில் அவதூறாக பதிவிட்டு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் முகநூலில் மாவட்டக் கழகத்தை வீணாக்கிய சாதி வெறி பிடித்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலை துண்டிக்கப்படும் எனவும் எம்ஆர்கே அழிவின் ஆட்டம் ஆரம்பம் எனவும் முரளி கிருஷ்ணன் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அவதூராக அவர் பதிவு செய்து வந்துள்ளார். இதனை ஆதாரத்துடன் போலீசார் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: திமுகவைச் சேர்ந்த நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவர் பதவி விலகல் - விசிக ஏற்குமா?
இதையடுத்து திமுக பிரமுகரான முரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். முரளிகிருஷ்ணன் கடலூரில் உள்ள பெயிண்ட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் என கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.