Home /News /tamil-nadu /

கடலூர் : நடன நிகழ்ச்சியால் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட மாப்பிள்ளை... போலீசில் பரபரப்பு புகார்... திருமணத்தில் நடந்தது என்ன?

கடலூர் : நடன நிகழ்ச்சியால் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட மாப்பிள்ளை... போலீசில் பரபரப்பு புகார்... திருமணத்தில் நடந்தது என்ன?

marriage

marriage

திருமணம் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எங்களுக்கு ரூபாய் 7 லட்சம் செலவாகி உள்ளது. எனவே எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. - மணமகன் ஸ்ரீதர்

  கடலூரில் திருமணத்தையொட்டி நடந்த டிஜே நிகழ்ச்சியில், மணமகள் நடனமாடுவதற்கு மாப்பிள்ளை உள்பட அவரது வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்னையில், மணமகன் வெளியேறியதால், அவருக்கு பதிலாக முறை மாமனை மணமகள் மணந்துள்ளார்.

  இதையடுத்து, தனக்கு ரூ. 7 லட்சம் வரை இழப்பு என்று கூறி மணமகன் புகார் அளிக்க நடந்த சம்பவங்கள் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊரைச்சேர்ந்த ஸ்ரீதருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஜெயசந்தியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்து திருமணம் நாள் குறிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று 20.01.2022 அன்று காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த திருமணத்தில் டிஜே நிகழ்ச்சிக்கு பெண் வீட்டார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

  இதில் பெண் அழைப்பு முடிந்து திருமண மண்டபத்தில் அனைவரும் டிஜே பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மணமகள் வீட்டார்கள் மணமகன் மற்றும் மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் நடனமாட வராமல், மேடையில் அமர்ந்துள்ளார்.

  இதையும் படிங்க : கேரளாவில் உச்சத்தில் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 46 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!

  மணமகள் மற்றும் மணமகள் உறவினர்கள் சினிமா பாடலுக்கு வெகு நேரமாக ஆண்களுடன் நடனம் ஆடியபோது, உறவினர் ஒருவர் மணப்பெண் மேல் கை வைத்து நடனம் ஆடியதால், மணமகன் உடனடியாக மணப்பெண்ணிடம் ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இரு குடும்பங்களிடையே மோதல் ஏற்பட்டு திருமண மண்டபத்தில் இருந்து மணமகன் வெளியேறினார்.

  உடனே மணப்பெண்க்கும் முறை மாமனுடன் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருமணம் நடைபெற்றது. இதுபற்றி, தகவலறிந்து மணமகள் ஸ்ரீதர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

  அதில் அவர் கூறியிருப்பதாவது-
  என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து திருமண மண்டபத்தில் டிஜே நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என்னையும், ஜெய்சந்தியாவையும் நடனம் ஆடச் சொல்லி பெண் வீட்டு உறவினர்கள் கட்டாயப்படுத்தி ஆட வைத்தனர். மேலும் பெண் வீட்டு உறவினர் மணப்பெண் கழுத்தில் கையை வைத்துக் கொண்டு நடனமாடியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது.

  இதையும் படிங்க : கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு

  ஏன் இது போல் நடந்து கொள்கிறாய்? என்று கேட்டதற்கு திருமணத்தை நிறுத்திவிட்டு மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அன்றே வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் நானும் எனது குடும்பமும் உறவினர்களும் மனவேதனை அடைந்து உள்ளோம். திருமணம் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எங்களுக்கு ரூபாய் 7 லட்சம் செலவாகி உள்ளது. எனவே எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.

  ஆகையால் மணமகள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மணமகன் ஸ்ரீதர் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இதையும் படிங்க : ‘ஒரு மாவட்டம் ஒரு விமான நிலையம் திட்டம்’ - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..
  Published by:Musthak
  First published:

  Tags: Marriage

  அடுத்த செய்தி