கொரோனா 2-வது அலையில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டுவிழா..

கொரோனா இரண்டாவது அலையில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு பாராட்டுவிழா நேற்று கடலூரில் நடைபெற்றது. அதில் பல் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மற்றும் ஆட்சியர் வழங்கினர். 

கொரோனா இரண்டாவது அலையில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு பாராட்டுவிழா நேற்று கடலூரில் நடைபெற்றது. அதில் பல் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மற்றும் ஆட்சியர் வழங்கினர். 

  • Share this:
இந்தியாவை உலுக்கி எடுத்த கொரோனா இரண்டாவது அலை ஏறக்குறைய முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் நலன் கருதி தூய்மை பணிகள் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு பணிகளில் ஈடுபட்ட முன் களப் பணியாளர்கள் தடுப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் தூய்மை பணியில் ஈடுப்பட்ட  500 முன்கள பணியாளர்களுக்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்க வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்   

வீராணம் ஏரியை வந்தடைந்த காவிரி நீர்.. விவசாயிகள் மகிழ்ச்சி..

இதனை தொடர்ந்து நேற்று தனியார் மண்டபத்தில் முன்கள பணியாளர்களை கொளர படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் பாராட்டு விழா நடத்தினார். தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் 500 பயனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முன்னிலையில்  வழங்கினார்.
Published by:Vaijayanthi S
First published: