தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வள்ளலார் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று
கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார். இணையதளம் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151 தைப்பூச ஜோதி தரிசன விழா 18 ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவையொட்டி 17 ம் தேதி கொடி ஏற்றதுடன் துவங்கவுள்ளது.
18 ம் தேதி தைப்பூச தினத்தையொட்டி காலை 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 10:00, மதியம், 1:00, இரவு, 7:00, 10:00 மற்றும் 29ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கும் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
ஜோதி தரிசன விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த சன்மார்க்க அன்பர்கள் தரிசனம் செய்து வருவார்கள். தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31.01.2022 வரை நீட்டித்து தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது .
இதையும் படிங்க: 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31 வரை பள்ளி விடுமுறை- தேர்வுகளும் ஒத்திவைப்பு
கடலூர் மாவட்டத்திலும் பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு வடலூர் சத்தியஞானசபை அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 18.01.2022 அன்று நடைபெறும் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டிலிருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A என்ற இனைதள பக்கத்தின் மூலம் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.