சாலையில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை: போலீசார் அதிரடி!

கொரோனா பரிசோதனை

கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக  இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு  வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

 • Share this:
  கடலூரில் தேவையிலாம்மல் இருசக்கர வாகனங்களில் வெளியே வந்தவர்களுக்கு சாலையிலேயே  போலீசார் கொரோனா பரிசோதனை செய்தனர்.

  தமிழகத்தில் கொரோனா பரவலின் தீவிரத்தை குறைக்கும் விதமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ள போதிலும், வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவர முழு ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

  தேவையின்றி சுற்றித் திரிபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களின் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக  இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  இதனை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு  வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில்   டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீசார் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது தேவையில்லாமல் வெளியே சுற்றி வந்தவர்களை தடுத்து நிறுத்தி  அவர்களுக்கு பிசிஆர் கொரோனா பரிசோதனை   மேற்கொள்ளப்பட்டது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை வெளியே சுற்றுபவர்களுக்கு ஒர் அச்சத்தை ஏற்பபடுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: