கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் 50% குறைந்தது: அமைச்சர் தகவல்!

அமைச்சர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் சராசரியாக ஒருநாளைக்கு 800 முதல் 900 வரை பாதிப்பு பதிவான நிலையில் தற்போது 500 என்ற அளவிலேயே பாதிப்பு பதிவாகி வருகிறது.  தொற்று பரவல்  50 சதவீதம் வரை குறைந்துள்ளது

 • Share this:
  கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல்  50 சதவீதம் குறைந்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  கடலூர் அரசு காவலர் மருத்துவமனையில் காவலர்கள்  பிரத்யேகமாக  கொரோனா  சிகிச்சை எடுத்துக்கொள்ள அமைக்கப்பட்டுள்ள 20 ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும், 100 சாதாரண  படுக்கை வசதி களையும் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்துறை அமைச்சர்,
  கொரோனா தொற்று கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது  தொற்று பரவல் சற்று குறைந்து வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் சராசரியாக ஒருநாளைக்கு 800 முதல் 900 வரை பாதிப்பு பதிவான நிலையில் தற்போது 500 என்ற அளவிலேயே பாதிப்பு பதிவாகி வருகிறது.  தொற்று பரவல்  50 சதவீதம் வரை குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், “கடலூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக தொற்றின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

  மேலும் படிக்க.. தேவையின்றி சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை..

  மாவட்டம் முழுவதும் சுமார் 450 ஆக்சிஜன் வசதி கூடிய படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் 500க்கும் மேற்பட்ட சாதாரண படுக்கை வசதியுடன் தயார் நிலையில் உள்ளது. இது மட்டுமின்றி சித்தா மருத்துவம் எடுத்துக் கொள்ள 100 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என கூறினார்

   

  மேலும், “பொது முடக்கம்  அறிவிக்கப்பட்டாலும்  மக்களுக்கு வீடு தேடி காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உருவாக்க முடியும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: